மதுரை மாவட்டத்தில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை அவனியாபுரம் பாலமேடு அலங்காநல்லூர் போன்ற பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு விமர்சையாக நடைபெற்று தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவில் மட்டுமின்றி உலகத்தின் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நிறைவு பெற்ற நிலையில் மதுரை அலங்காநல்லூர் அருகே கீழக்கரை என்னும் இடத்தில் சுமார் 100 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள கலைஞர் ஏறு தழுவுதல் அரங்கம் என்னும் பெயரில் உள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தில் ஜனவரி 25 முதல் பிப்ரவரி 9ஆம் தேதி வரை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என்று அமைச்சர் மூர்த்தி அறிவித்திருந்தார் இதற்காக மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் விரிவான ஏற்பாடுகளும் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது
இந்த நிலையில் கடந்த 25 மற்றும் 27 ஆகிய தேதிகளில் மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதி சார்பில் கீழக்கரையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது இந்த போட்டிகளில் மாடுபிடி வீரர்கள் மாட்டு உரிமையாளர்கள் ஆகியோரிடையே அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்படுவதாகவும் இதன் காரணமாக சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கப்பட்டு இருந்தது

இந்த நிலையில் மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி சார்பாக இன்று காலை கீழக்கரையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி நடைபெற்ற நிலையில் காளைகளை அவிழ்த்து விடும் உரிமையாளர்கள் அவர்களே காளைகளை அடக்குவதும் அப்போது வீரர்கள் மற்றும் காளை உரிமையாளருக்கு இடையே வாக்குவாதங்கள் ஏற்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது தொடர்ச்சியாக காளை உரிமையாளர்கள் தங்கள் காளைகளை அவிழ்த்து விட்டு தாங்களே அடக்கி செல்வதும் இதை ஜல்லிக்கட்டு நடத்துபவர்கள் அடிக்கடி அவர்களை எச்சரிப்பதுமாக ஜல்லிக்கட்டு போட்டியின் மாண்பை குறைக்கும் வகையில் இருப்பதாக ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்
மேலும் பிப்ரவரி 10 வரை நடைபெறக்கூடிய ஜல்லிக்கட்டு போட்டிகளால் மதுரை மாவட்டத்தின் நிர்வாகம் முற்றிலுமாக முடங்கி போக வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது குறிப்பாக காவல்துறையினர் தினசரி 500க்கும் மேற்பட்டோர் காவல் பணியிலும் சுகாதாரத் துறையினர் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அலங்காநல்லூர் கீழக்கரையிலும் இதேபோன்று வருவாய் துறை உள்ளிட்ட மற்ற துறை சார்ந்தவர்களும் பல்வேறு பகுதிகளில் இருந்து கீழக்கரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக பணிகள் செய்வதற்கு செல்வதால் தங்களது பகுதியில் மக்களின் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்த தீர்வுகள் ஏற்படுவதில் தாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் மத்தியிலும் வேதனை தெரிவிக்கின்றனர்
திமுக அரசின் இந்த செயலால் பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மத்தியில் கடும் குமுறல் ஏற்பட்டுள்ளதாக கூறும் நிலையில் இதற்கெல்லாம் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தங்கள் சரியான பாடத்தை திமுக அரசிற்கு தருவார்கள் என கூறிச் சென்றனர் மேலும் ஜல்லிக்கட்டு காளைகளை பாதுகாப்பின்றி சாலைகளில் கொண்டு செல்வதால் பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் சிரமங்கள் ஏற்படுவதாகவும் அந்த பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர் இதனால் பல்வேறு குளறுபடிகளுக்கு மத்தியில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியானது பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பல்வேறு சிரமங்களை கொடுக்கும் நிலையில் அதனை தவிர்க்கும் பொருட்டு தமிழக முதல்வர் இது போன்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதற்கு அனுமதி கொடுப்பதில் மாவட்ட நிர்வாகத்திற்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வழங்க வேண்டும் என இந்த பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்






