• Thu. Jan 15th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மெரினாவில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் -கமல் பேச்சு

ByA.Tamilselvan

Jan 6, 2023

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை சென்னையில் நடத்த வேண்டும் என்பது எனது விருப்பம் என நடிகர் கமல் பேச்சு
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் இன்று நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் நடைபயணம் டெல்லியில் நடந்த போது அதில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். . இதில் தமிழகத்தில் இருந்து மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
அவர்களுக்கு சான்றிதகள் வழங்கி கமல்ஹாசன் நிர்வாகிகள் மத்தியில் பேசினார். டெல்லியில் நடைபெற்ற பாரத் ஜோடோ யாத்திரையில் என்னோடு கலந்து கொண்ட உங்கள் அனைவருக்கும் பாராடுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன். மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு மத அரசியலை செய்து கொண்டிருக்கிறது. மதத்தை அரசியலுக்கான தகுதியாக பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
மக்கள் நீதி மய்யம் கட்சியை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல தேவையான நடவடிக்கைகளை நான் எடுத்து வருகிறேன். தமிழர்களின் பாரம்பரியத்தை காப்பதிலும் மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து உறுதுணையாக இருக்கும். அந்த வகையில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை சென்னையில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். மெரினாவில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என்பது எனது விருப்பம். இவ்வாறு கமல்ஹாசன் பேசினார். இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.