• Thu. May 2nd, 2024

கோவிலின் உண்டியலை திருடியவருக்கு சிறை..,நீதிபதி தீர்ப்பு…

ByP.Thangapandi

Dec 5, 2023

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி கிராமத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் திருக்கோவிலில் கடந்த 27.08.2022 அன்று நள்ளிரவில் கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து சுமார் 5 லட்சத்து 76 ஆயிரம் ரொக்கம் மற்றும் 1 லட்சம் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்தது சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்த உத்தப்பநாயக்கணூர் காவல் நிலைய போலிசார், இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக 29.08.2022 அன்று பாப்பாபட்டியைச் சேர்ந்த பாலமுருகன், தமிழ்செல்வன் என்ற இருவரை கைது செய்தும், அவர்களிடமிருந்து 5 லட்சத்து 76 ஆயிரம் ரொக்க பணம் மற்றும் ஒரு லட்சம் மதிப்பிலான நகைகளை பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை உசிலம்பட்டி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி எண் 1 மகாராஜன் முன்னிலையில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று உசிலம்பட்டி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி எண் 2 சத்திய நாராயணன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது, வழக்கை விசாரித்த நீதிபதி சத்திய நாராயணன் குற்றவாளிகளான பாலமுருகன், தமிழ்ச்செல்வன் என்ற இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *