கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். இன்று அப்பகுதிக்கு வந்த இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் பேபி மற்றும் எம்.பிக்கள் சச்சிதானந்தம் உள்ளிட்டோர் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு அருகிலேயே அமைந்துள்ள உயிரிழந்த குழந்தை குரு விஷ்ணு இல்லத்தில் இரங்கல் உறவினர்களை சந்தித்து வருத்தம் தெரிவித்தனர்.
ஏமூர் கிராமத்தில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு சென்று ஆறுதல் தெரிவித்த அந்த குழு, செய்தியாளர்களை சந்தித்தது.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பேபி, வீடுகளுக்கு சென்று பார்த்து ஆறுதல் தெரிவித்தோம், மருத்துவமனைக்குப்சென்றோம். உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு சென்று ஆறுதல் தெரிவித்தோம். உயிரிழந்த சந்திரா என்பவரின் மகன் சக்திவேல் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளார். மேற்கொண்டு அவர் படிப்பை தொடர நாங்கள் உறுதுணையாக இருப்போம். தமிழக அரசு அமைத்துள்ள ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக அரசின் நடவடிக்கைகள் பாராட்டுக்குறியது. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அரசு உடனடியாக எடுத்ததன் காரணமாக நிறைபேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். நள்ளிரவிலேயே முதல்வர் இங்கு வந்து மருத்துவர்களை வரவழைத்து சிகிச்சை அளித்துள்ளர். இதனை பாராட்டலாம். 8 மணி நேரத்தில் உடல் பரிசோதனை செய்யப்பட்டு பாராட்டதக்கது. ஏற்பாடு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் ரோடு ஷோ நடத்தியதில் இது போன்ற உயிரிழப்புகள் நடந்தது இல்லை. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. நிகழ்ச்சி தன்னார்வலர்கள் கட்டுபாட்டு செய்யவில்லை.

விஜய் வருகை தருவது தாமதமானதால் 7 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு குடிநீர், உணவுகள் வழங்கப்படாததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இது போன்ற நிகழ்வுகள் இனி நடந்திட கூடாது, இதனை பார்த்து மக்கள் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும், அரசியல் கட்சிகள் தொண்டர்களை கட்டுப்படுத்த வேண்டும். தவறு யார் செய்து இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். மத்திய, மாநில அரசுகள் நிதி உதவிகள் அறிவித்து அளித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு வேலை வழங்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு இந்த விசயத்தில் சிறப்பாக செயல்பட்டுள்ளது. இந்த நிலையில் முடிவுக்கு வரமுடியாது, விசாரணைக்குப் பிறகு உண்மை நிலவரம் தெரியவரும். இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எவ்வளவு பேர் கலந்து கொள்வார்கள் என்பதை அரசிடம் கலந்து ஆலோசித்து இருக்க வேண்டும். அரசு உயிரிழந்தவர்களுக்கு வீடு கொடுக்க வேண்டும், பணம் கொடுத்தால் மட்டும் போதாது. குடும்ப உறுப்பினர்களை இழந்து இருக்கிறார்கள் என்றார்.