• Tue. Mar 10th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

ஆதி அய்யனார் கோவில் திருவிழா நடத்த வட்டாட்சியர் கூட்டத்தில் முடிவு

ByKalamegam Viswanathan

Oct 8, 2024

வாடிப்பட்டியில் உள்ள நீரேத்தான் மேட்டு நீரேத்தான் ஆதி அய்யனார் கோவில் திருவிழா நடத்த வாடிப்பட்டி வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் முடிவு.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட நீரேத்தான் மேட்டு நீரேத் தான் கிராமத்திற்கு சொந்தமான ஆதி அய்யனார் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா கொண்டாடுவதில் பொதுமக்களின் இரண்டு பிரிவினர்களிடையே பிரச்சனை இருந்து வந்தது. இந்த நிலையில் வாடிப்பட்டி வட்டாட்சியர் தலைமையில் இரு தரப்பினரையும் அழைத்து சமாதான கூட்டம் நடத்தியதில் சுமுகமான முடிவு ஏற்பட்டதன் விளைவாக திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இது குறித்து பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கையில் நீரேத்தான் மேட்டு நீரேத்தான் அய்யனார் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழாவை சுமூகமாக நடத்துவது என வாடிப்பட்டி வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அறநிலை துறை அதிகாரி வழிகாட்டுதல்படி திருவிழாவை நடத்துவது என்றும் திருவிழா நடத்துவதற்கு பொதுமக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.