• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

மாவட்ட ஆட்சியர் விட்டுக் கொடுத்தது மாபெரும் தவறு

Byகுமார்

Jan 20, 2025

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இன்பநிதியின் நண்பர்களுக்காக தனது இருக்கையை மாவட்ட ஆட்சியர் விட்டுக் கொடுத்தது மாபெரும் தவறு…

நான் தவறு செய்யவில்லை என பத்திரிகையாளரை சந்தித்து, மாவட்ட ஆட்சியர் விளக்கம் கொடுத்தது முட்டாள்தனமாக பேசியது அதைவிட தவறு

மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள தனியார் அரங்கில் பாட்னா திட்டன் என்ற தலைப்பில் தொழில் முனைவோர்களுக்கான மாநாடு நடைபெற்றது. இந்நிகழ்வில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,,

சமீபத்தில் திராவிட கட்சியின் தலைவர் விஜயை அழைத்தார். எந்த கட்சியெல்லாம் தமிழகத்தில் காணாமல் போகிறதோ அதை எல்லாம் விஜயை அழைக்கிறார்கள். செல்வபெருந்தகை அவர்களுக்கு நான் சொல்வது, நடிகர் விஜய் மீது வைக்கும் நம்பிக்கையை 10% ராகுல் காந்தி மீது வைக்க வேண்டும். இதை நான் அறிவுரையாக சொல்கிறேன்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தமிழர்களின் அடையாளம் பெருமை. அடுத்த ஆண்டு பாஜகவின் மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளார்கள். ஜல்லிக்கட்டு போட்டிக்கு துணை முதலமைச்சர் வருவது தவறு கிடையாது. அவரது பையனையும் கூட்டிட்டு வந்தது தவறு கிடையாது. மகனுக்கு முதல் இருக்கையில் அமர வைத்தார்களா அது தவறுதான். அதைவிட மாபெரும் தவறு துணை முதல்வர் மகன் இன்பநதியின் நண்பர்களை முதல் இருக்கைக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக அமைச்சர் மூர்த்தி செய்தது தவறு.
மாவட்ட ஆட்சியர் என்னை வற்புறுத்தவில்லை என்று கூறுகிறார். அப்புறம் எதற்கு ஒரு இருக்கையை மாவட்ட ஆட்சியர் விட்டுக் கொடுத்தார். கலெக்டர் அமர்ந்திருந்த இருக்கையில் இன்பநதியின் நண்பர் அமர்ந்திருக்கிறார். மாவட்ட ஆட்சியர் தண்ணி இல்லாத காட்டிற்கு மாற்றி விடுவார்கள் என நினைக்கிறார். அவ்வளவு எளிதாக மாவட்ட ஆட்சியர் இருப்பிடத்திற்கு வர முடியாது. பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் விழுந்து, விழுந்து படித்து அந்த இடத்திற்கு வருகிறார்கள். நியாயமாக பார்த்தால் கலெக்டர் அமைச்சருக்கும், துணை முதல்வருக்கும் நடுவில் அமர்ந்திருக்க வேண்டும். அந்த இருக்கையை விட்டுக் கொடுத்ததை மாபெரும் தவறு. மாவட்ட ஆட்சியரை ஒரு ஓரத்தில் தள்ளிவிட்டார்கள். இப்படி இருந்தால் சாமானிய மனிதருக்கு இந்த கலெக்டரின் மீது எப்படி நம்பிக்கை வரும். அமைச்சர் மூர்த்தி பவர் இருந்தால் ஆடுவார், பவர் இல்லை என்றால் சாதாரணமாக அமர்ந்து விடுவார்கள். ஏனென்றால் அவர் அரசியல்வாதி, மாவட்ட ஆட்சியர் நடந்து கொண்ட விதம் ஏற்புடையது அல்ல.

மூர்த்தி அவர்கள் வேறு இருக்கையில் உதயநிதியின் மகனை அமர சொல்லி இருக்க வேண்டும்.

இருப்பில்லாத கட்சிகள், இளைஞர்கள் கட்சியில் சேர முடியாத கட்சிகள், இன்று வந்திருப்பவர்கள் விஜயை அழைக்கிறார்கள், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விஜய்யை அழைத்தாரா, இல்லையா? அதே வேலையை செல்வ பெருந்தகை செய்கிறார், பாஜகவிற்கு யாரையும் அழைக்க வேண்டிய அவசியமில்லை,

இளைஞர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் நாங்கள் யாரையும் அழைக்க வேண்டி அவசியம் இல்லை. திமுக பிறக்கும் முன்பு 1949க்கும் முன்பு, வள்ளுவர் அவர்கள் திருக்குறளில் ஆன்மீக கருத்துக்களை சொல்லி உள்ளார்.

தந்தை பெரியார் என்ன சொன்னார், வள்ளுவன் ஆரிய கைக்கூலி, வள்ளுவர் ஆரிய கைக்கூலி என்று சொல்லிவிட்டீர்களே? அப்புறம் வள்ளுவருக்கு காவிக்கொடி பூசினால் உங்களுக்கு என்ன அப்புறம் உங்களுக்கு என்ன பிரச்சனை. தமிழகத்திற்கு வலுவான தலைவர்கள் வரவேண்டும். திமுக தமிழகத்தில் இருப்பது சாபக்கேடாக பார்க்கிறேன் அப்பாவின் அடையாளத்தை வைத்து மூன்றாவது முறையாக வர வேண்டும் என்று நினைத்தால் அது சாபக்கேடு. ஏற்கனவே ஈரோடு இடைத்தேர்தலை நாங்கள் பார்த்துள்ளோம். தற்போது நடைபெற உள்ளது இடைத்தேர்தலுக்கான இடைத்தேர்தல்.

திருப்பரங்குன்றம் மலைமீது ஆடு கோழி பலியிட இஸ்லாமியர்கள் முற்பட்டது குறித்த பதில் அளித்த அண்ணாமலை, திமுகவை பொருத்தவரை பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவார்கள். சரித்திரத்தை பாருங்கள் அந்த மலை எப்ப இருந்து ஆறுபடை வீடுகளில் முக்கிய வீடாக முதல் படை வீடாக உள்ளது..

திருப்பரங்குன்றத்திற்கு சிக்கந்தர் என பெயர் வைத்து இவர்களை ஆட்டை தூக்கிக் கொண்டு செல்கிறார்கள்.

உலகத்திலேயே பாதுகாப்பாக இருக்கும் இடம் காவல்துறை அதிகாரிகள் இருக்கும் இடம் தான். அங்கே ஒரு திருடன் நுழைந்து செயினை வழிப்பறி செய்துவிட்டு செல்கிறான். தமிழகத்தில் காவல்துறைக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய நிலைமை வந்துவிட்டது.

தமிழகத்திற்கு தலைமை பொறுப்புக்கு வரும் அரசியல்வாதி விவசாயத்தைப் பற்றி நிபுணர் வரவேண்டும், நீர் மேலாண்மையை தெரிந்து கொண்ட நிபுணர் வரணும்,
முதலமைச்சர் இந்த தொழில் முனைவோர் மாநாட்டை சென்றாண்டு முதலமைச்சர் திறந்து வைத்தார். அண்ணாமலை வருகிறார் என்பதால் திமுக அமைச்சர்கள் இதை இந்த நிகழ்ச்சியை புறக்கணிக்கிறார்கள். இதற்கு ஆளுங்கட்சியின் தொழில்துறை அமைச்சர்கள் வரவேண்டும். இப்படி பிற்போக்குத்தனமான அரசியல் செய்தால் எப்படி மாநிலம் வளரும்.

அனைத்து அரசியல் தலைவர்களையும் வரச் சொல்லி 10 மேடையை அமைப்போம் பட்ட இடங்களில் பேசுவோம். எந்த கேள்விக்கு யார் வேண்டுமானாலும் பேசுவோம். இதற்கு அனைவரும் தயாரா? நாங்கள் அதற்கு தயாராக இருப்போம். என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.