சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்த சிவகங்கை எம்.பி.கார்த்திக் சிதம்பரம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பீகார் தேர்தல் குறித்து கேள்விக்கு ? இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. நம்பிக்கையுடன் தேர்தல் களத்தில் இறங்குகிறோம். வெற்றி இந்த முறை வரும் என்று முழுமையாக நம்புகிறோம்.
தேர்தல் ஆணையம் பல வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கி உள்ளனர். நேற்று நீதிமன்றம் அவர்களுக்கெல்லாம் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பெயர் நீக்கப்பட்டு இருந்தால் அவர்களை சேர்க்க வேண்டும் என கூறியுள்ளது.

எங்களுக்கு தேர்தல் ஆணையம் மீது பல சந்தேகங்கள் உள்ளது தேர்தலுக்கு முன்பு அதெல்லாம் தீர்ப்பார்கள் என நம்புகிறேன்.
தேர்தல் கருத்துக்கணிப்பை வைத்தே முடிவு செய்துவிடலாம் என்றால் தேர்தலே தேவையில்லை.. நிதீஷ் குமாருக்கு உடல் நலம் சரியில்லை என்று எல்லோருக்கும் தெரியும்..
பீகார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை என கூறுகிறார் என்று கேள்விக்கு? சிரித்துக் கொண்டே அதை முழுமையாக பார்க்கவில்லை அதனால் சொல்ல முடியவில்லை..
அதிமுக பிரச்சார கூட்டத்தில் த.வெ.க கொடி? அதிமுகவுடன் கூட்டணி முதலில் அமைக்கட்டும் பிறகு பார்ப்போம் அதிகாரப்பூர்வமாக அமையட்டும் அதற்குப் பிறகு கருத்து சொல்லுவோம்.
எடப்பாடி பழனிச்சாமி சொந்தக் கட்சியினரை வைத்து கொடி பிடிக்கப் பட்டதாக குற்றச்சாட்டு?
அதை சீரியஸா எடுத்துக் கொள்ளக் கூடாது. அவர் சொந்த கட்சி நிர்வாகிகளை வைத்து கொடிய பிடிக்க வைத்தாரே AI வைத்து செய்யவில்லையே அது வரைக்கும் சந்தோஷப்படுங்கள்.

தமிழ்நாடு காவல்துறை நடத்தியின் மீது வருத்தம் அளிக்கிறது. நிறைய வழக்குகள் நிலுவையில் உள்ளது நேற்று நீதிமன்றத்தில் 17 வயது சிறுமி கொலை வழக்கில் குற்றவாளியை விடுதலை செய்துள்ளது இதனால் போலீஸார் மீது பல கேள்விகள் விளைகிறது.
என்கவுண்டர் கஸ்டடி டெத் இதுபோன்ற குற்றங்களை நிரூபிப்பதற்கு ஒரு ஆணையம் அமைக்க வேண்டும். கான்ஸ்டபிள் இருந்து டிஜிபி வரைக்கும் மறு சீரமைப்பு செய்ய வேண்டும்.
தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் இது போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும் தலைமறைவாக இருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது என சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் கூறினார் .