• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

டிஎன்பிஎஸ்சி தேர்வில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை..

Byகாயத்ரி

May 18, 2022

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதல்நிலைத் தேர்வு வருகிற 21-ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. மொத்தம் 5529 பணியிடங்களுக்கு நடைபெற உள்ள இந்த தேர்வை ஆண்கள் 4 லட்சத்து 96 ஆயிரத்து 247 பேரும், பெண்கள் 6 லட்சத்து 81 ஆயிரத்து 880 பேர் எழுத உள்ளார்கள். இதற்காக முப்பத்தி எட்டு மாவட்டங்களில் 117 தேர்வு மையங்களில் 58 ஆயிரத்து 900 அறைகளில் உள்ள தேர்வு நடைபெற உள்ளது.

இந்த நிலையில் இந்த தேர்வில் கலந்து கொள்பவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்பது கட்டாயமில்லை என்றும், முகக்கவசம் அணிந்து வந்தால் நல்லது என்றும் டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.