• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சிவகங்கையில் மக்கள் குறைதீர்க்கும் நாள்

ByKalamegam Viswanathan

Feb 20, 2023

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில்
40 பயனாளிகளுக்கு ரூ.4.12 இலட்சம் மதிப்பீட்டிலான
அரசின் நலத்திட்ட உதவிகளையும், அதன் பயன்களையும்
மாவட்ட ஆட்சித்தலைவர்(பொ) ப.மணிவண்ணன், வழங்கினார்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் , மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர்(பொ) ப.மணிவண்ணன், தலைமையில் நடைபெற்றது.
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித் தொகை, மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை உதவித் தொகை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள், புதிய மின்னணு குடும்ப அட்டை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 275 மனுக்கள் பெறப்பட்டது. அம்மனுக்களில், தகுதியுடைய மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர்(பொ) ப.மணிவண்ணன் அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், வருவாய்த்துறையின் சார்பில் சமூகப்பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் சிங்கம்புணரி வட்டத்தைச் சார்ந்த 18 பயனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 08 பயனாளிகளுக்கு ரூ.1,61,679 மதிப்பீட்டிலான பல்வேறு வகையான உதவி உபகரணங்களையும், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில், 10 பயனாளிகளுக்கு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறவனங்களின் சர்வதேச போட்டித் தன்மையினை மேம்படுத்தவும், உலகளாவிய சந்தையுடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தவதற்கு ஏதுவாக 9000 சான்றிதழ்கள் பெற்றிட 2 பயனாளிகளுக்கு ரூ.1,50,000 மதிப்பீட்டிலான மானியத்தொகைக்கான ஆணைகளையும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் 02 மகளிர்களுக்கு தலா ரூ.50,000
மதிப்பீட்டில் மகளிர் தொழிற் முனைவர் கடனுதவிகளும் என ஆக மொத்தம் 40 பயனாளிகளுக்கு ரூ.4,11,979 மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளையும், அதன் பயன்களையும்; மாவட்ட ஆட்சித்தலைவர்(பொ) ப.மணிவண்ணன் வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெறப்பட்ட மனுக்களில், தகுதியுடைய மனுக்கள் மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, மாற்றுத்திறனாளியின் கோரிக்கைக்கிணங்க, மாவட்ட ஆட்சித்தலைவர்(பொ) ப.மணிவண்ணன் , இருசக்கர நாற்காலியினை மாற்றுத்திறனாளிக்கு உடனடியாக வழங்கினார்.

  இந்நிகழ்ச்சியில், உதவி ஆணையர் (கலால்) ச.ரத்தினவேல் சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் (பொ)  பி.சாந்தி, உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்