• Sat. Apr 27th, 2024

வாலுடன் பிறந்த அதிசய குழந்தை..!

Byவிஷா

Feb 20, 2023

பிரேசிலில் வாலுடன் அதிசய குழந்தை பிறந்திருப்பது, மருத்துவத்துறையை வியக்க வைத்திருக்கிறது.
உலக அளவில் மருத்துவத்துறையானது இன்று பல்வேறு வளர்ச்சிகளை அடைந்திருந்தாலும், அதற்கேற்றாற் போல பல்வேறு சவால்களையும் சந்தித்து வருகிறது. அந்த வகையில் பிரேசில் நாட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அந்த குழந்தை சரியான எடையுடன் ஆரோக்கியமாக பிறந்துள்ளது. ஆனால் குழந்தைக்கு பின்னால் 6 சென்டிமீட்டர் நீளத்தில் ஒரு வால் இருந்துள்ளது. இதனை பார்த்து மருத்துவர்கள் ஆச்சரியம் அடைந்த நிலையில், பிரேசில் நாட்டில் வாலுடன் குழந்தை பிறந்தது இதுவே முதல்முறை என தெரிவித்துள்ளனர்.
அந்த வாழ் மிருதுவான தோளாக இருந்தாலும் எந்த அசைவும் இல்லாமல் இருந்துள்ளது. ஆனால் அதை ஊசியால் குத்திய போது குழந்தை அழுததாக கூறப்படுகிறது. இதனால் அந்த வாலில் உணர்ச்சி உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மருத்துவர்கள் தெரிவித்திருப்பதாவது..,
இது போன்ற குழந்தைகள் பிறப்பது அரிதான ஒன்று. முதுகு தண்டு வளர்ச்சி அடையாமல் இருந்தால் இவ்வாறு வாளுடன் குழந்தை பிறக்கும். முதுகு தண்டு வளர்ச்சி அடையாமல் இருந்தால், அந்த இடைவெளியில் தான் வாழ் உருவாகின்றது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அந்த பெண் குழந்தைக்கு இரண்டு மாதங்கள் நிறைவடைந்த பின் அறுவை சிகிச்சை மூலம் வால் அகற்றப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னதாக மெக்சிகோவில் ஐந்து சென்டிமீட்டர் நீளமுள்ள வாலுடன் ஒரு பெண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *