• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மின்னணு பண பரிமாற்றத்துக்கான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியீடு

Byகாயத்ரி

Jan 4, 2022

இணையதள வசதியின்றி மின்னணு பண பரிமாற்றத்துக்கான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இது, இணையதள வசதி இல்லாத உட்புற பகுதி மக்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் என்று தெரிவித்துள்ளது.

இணையதள வசதியோ, தொலைத்தொடர்பு வசதியோ இல்லாமல் நேரில் சிறிய தொகையை மின்னணு பண பரிமாற்றம் செய்வதற்கான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.அதன்படி, ஏடிஎம் அட்டை, கடன் அட்டை, வாலட், மொபைல் போன் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி இந்த பரிமாற்றத்தில் ஈடுபடலாம். ஒருமுறை பரிமாற்றம் செய்வதற்கான உச்சவரம்பு ரூ.200 ஆகும்.

வாடிக்கையாளரின் வெளிப்படையான சம்மதத்துடன் இந்த பரிமாற்றத்தை மேற்கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. மேலும், இணையதள வசதி இல்லாத உட்புற பகுதி மக்களுக்கு இது வரப்பிரசாதமாக அமையும் என்றும் தெரிவித்துள்ளது.