• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை குறித்து நீதி வேண்டும் – குடும்பத்தினர் போராட்டம்

Byமதி

Nov 25, 2021

அண்ணாவின் பிறந்தநாளையொட்டி 700 ஆயுள் தண்டனை கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக முன்விடுதலை செய்யப்படுவோர் குறித்து ஆய்வு செய்வதற்கு பல்வேறு குழுக்கள் அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, பாலியல் வன்கொடுமை, தீவிரவாதம், மத, ஜாதி மோதல், அரசிற்கு எதிராக செயல்பட்டவர்கள், தப்பிக்க முயன்றவர்கள் உள்ளிட்ட 17 குற்றங்களில் ஈடுபட்டவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

இதனால் தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசானையில் மீண்டும் முஸ்லிம்கள் வஞ்சிக்க பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலை குறித்து நீதி வேண்டும் என சிறைவாசிகள் குடும்பத்தினர் கோவையில் ஆத்து பாலம் அருகில் குழந்தைகள் உடன் போராட்டம் நடத்தினர்.