• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஐ எஸ் எப் வேர்ல்ட் ஸ்கூல் கேம்ஸ் போட்டி..,

ByPrabhu Sekar

Apr 17, 2025

செர்பியாவில் ஏப்ரல் 4 முதல் 14 ஆம் தேதி வரை நடைபெற்ற ஐ எஸ் எப் வேர்ல்ட் ஸ்கூல் கேம்ஸ் என்று அழைக்கப்படும் பள்ளிகளுக்கு இடையிலான ஒலிம்பிக் போட்டி என்று சொல்லப்படும் போட்டியில் இந்தியா சார்பில் தமிழகத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்றனர் இதில் 55 நாடுகளில் இருந்து 5000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

இதில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் நடனம் மற்றும் தற்காப்பு கலையான வாக்குவாண்டா என்ற போட்டியில் பங்கேற்றனர் இதில் 6 வெள்ளி பதக்கம் வென்றனர்.

மேலும் ஒட்டுமொத்தமாக நடைபெற்ற போட்டிகளில் இந்தியா ஐந்தாம் இடத்தை பெற்றது இந்த போட்டியில் பங்கேற்பதற்காக தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒவ்வொரு வீராங்கனைகளுக்கும் தலா இரண்டரை லட்சம் ரூபாய் வழங்கயதாக வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த வீரர் வீராங்கனைகளுக்கு உறவினர்கள் தாய் தந்தையினர் என அனைவரும் சால்வை அணிவித்தும் மாலை அணிவித்தும் பூங்கொத்து கொடுத்தும் உற்சாகமாக வரவேர்ற்றனர்.

அதன்பின்பு செய்தியாளர்களை சந்தித்தபோது செர்பியாவில் நடைபெற்ற போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்றதில் வாக்குவாண்டா என்ற தற்காப்பு கலையில் நான்கு வெள்ளி பதக்கங்களும் நடன ப் போட்டியில் இரண்டு வெள்ளி பழக்கங்களும் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தனர்.

மேலும் சிற்பியாவில் உணவு முறைகள் மட்டும் எங்களுக்கு சரியாக கிடைக்கவில்லை என்றும் இந்திய உணவுகள் கிடைக்கவில்லை என்று தெரிவித்தனர்.

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று வெள்ளி பதக்கம் வெல்வது லட்சியம் என்று தெரிவித்தனர்

இதனைத் தொடர்ந்து பேசிய பயிற்சியாளர்கள் தமிழக அரசிற்கும் தமிழக விளையாட்டு துறை அமைச்சரும் துணை முதலமைச்சர் ஆன உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்தனர்.