• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

யூடியூப் சுட்டி பிரபலம் ஜெயிலர் படத்தில் நடிக்கிறாரா..??

Byகாயத்ரி

Sep 1, 2022

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படல் “ஜெயிலர்”. படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், விநாயகம், வசந்த் ரவி, யோகி பாபு என பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் சமீபத்தில் வெளியானது. இதற்கிடையில், அவ்வப்போது படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்த தகவலும் இணையத்தில் வைரலாவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், தற்போது இப்படத்தில் யூடியூப் பிரபலமான ரித்து எனும் 7 வயது குழந்தை பிரபலம் “ஜெயிலர்” படத்தில் ரஜினிக்கு பேரனாக நடிக்கவுள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. யூடியூப்பில் ரித்துவின் வீடியோக்களை பார்க்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.

அந்த அளவிற்கு நகைச்சுவையாக பல கெட்டப்கள் போட்டு, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பல வீடியோக்களை தன்னுடைய யூடியூப் சேனலில் பதிவிட்டுருப்பார். இதனாலே நயன்தாராவும் 02 படத்தில் நடிக்க ரித்துவிற்கு வாய்ப்பு கிடைத்தது என்றே கூறலாம். இந்த நிலையில், O2 படத்தை தொடர்ந்து ரஜினியுடன் ரித்து ஜெயிலர் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கபடுகிறது.