• Mon. Oct 12th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

தளபதி 66 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்திற்கு தமான் இசையமைக்கிறார். ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார் என அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. விரைவில் படத்தின் ஷுட்டிங் துவங்கப்பட உள்ளது. தற்போது படத்தின் கதை பற்றிய அப்டேட்டும் வெளியாகி உள்ளது.

இந்த படத்தில் விஜய்யின் அப்பா ரோலில் தான் சரத்குமார் நடிக்க போகிறாராம். விஜய்க்கு இந்த படத்தில் இரண்டு அண்ணன்களாம். விஜய்க்கு அண்ணன் ரோலில் நடிக்க 1980களில் ஃபேமசான நடிகர்கள் சிலரிடம் பேசப்பட்டு வருகிறதாம். தளபதி 66 படம் குடும்ப கதை என சொல்லப்படுகிறது. இதை தான் மறைமுகமாக இன்னொரு பூவே உனக்காக படமாக இருக்கும் என படக்குழுவினர் சொல்லி வருகிறார்களாம்.

தளபதி 66 படத்தின் கதையை கேட்டு விட்டு 20 வருடத்தில் எவரும் சொல்லாத கதையாக உள்ளதாக விஜய் பாராட்டியதாக தயாரிப்பாளர் தில் ராஜு கூறி இருந்தார். இதனால் ரசிகர்களிடம் இந்த படம் நிச்சயம் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.