• Tue. Jan 13th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நடிகர் தனுஷா இது?!?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் நடிகர் தனுஷ். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் கலக்கி வருகிறார். இதற்கிடையில் அவர் கடந்த சில காலங்களுக்கு முன்பு தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிவதாக அறிவித்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் தனுஷ் தனது பட வேலைகளில் பிசியாக இருந்து வந்தார்.

இந்நிலையில் தனுஷ் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம ஹாப்பியாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தான் வளர்க்கும் நாய்களான கிங், காங், ஜெங்கிஸ், கேசர் ஆகியவற்றுடன் உள்ளார். மேலும் அதில் அவர், நீண்ட நாளுக்குப் பிறகு ரியூனியன், எனது பாய்ஸ்களுடன் இருப்பது மிக்க மகிழ்ச்சி எனப் பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தில் தனுஷ் மீசை, தாடியெல்லாம் எடுத்து பள்ளி மாணவன் போல உள்ளார்.