• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

சரியில்லாதது கவர்மெண்டா? சிஸ்டமா? – வைரலாகும் வலிமை டயலாக்!

சிஸ்டம் சரியில்லை.. அதனால் தான் அரசியலுக்கு வரப் போகிறேன் என ரஜினிகாந்த் முன்னதாக கூறியிருந்த நிலையில், அதற்கு எதிர் பஞ்ச் கொடுக்கும் விதமாக நடிகர் அஜித் குமார் வலிமை படத்தில் பேசியிருக்கும் காட்சி இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.. மேலும் இது இரு தரப்புக்கும் சர்ச்சையையும் சண்டையையும் உருவாக்கி உள்ளது.

பல ஆண்டுகளாக அரசியலுக்கு வரப் போகிறேன் என கூறிக் கொண்டிருந்த நடிகர் ரஜினிகாந்த், அச்சமயத்தில் நடைபெற்ற அரசியல் கூட்டங்களில், சிஸ்டம் சரியில்லை. அதை சரி செய்யவே அரசியலில் இறங்கப் போகிறேன் என்று கூறினார். மேலும், இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை என்று தொடங்கியவர், இறுதியாக இப்பவும் இல்லை இனி எப்பவும் இல்லை என தனது அரசியல் பயணத்தை முடித்துக்கொண்டார்!

இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள அஜித் குமாரின் வலிமை திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள வசனம் ஒன்றில், ரஜினியின் வசனத்தை கிளறும் வகையில் உள்ளதாக ரஜினி ரசிகர்கள் கூறி வருகின்றனர். நடிகர் அஜித் குமார் இந்த வசனத்தை எப்படி ஓகே செய்து பேசினார் என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.

வலிமை படத்தில் அம்மாவிடன் அர்ஜுன் கதாபாத்திரம் பேசும் வசனத்தில், நடிகர் அஜித் குமார், கவர்மென்ட் சரியில்லை.. சிஸ்டம் சரியில்லைன்னு திட்றோம்.. ஆனால், நமக்குன்னு ஒரு பிரச்சனை வரப்ப.. நேர்மையா இருக்காமா சுயநலம் ஆகிடுறோம்.. நாம தான சிஸ்டம்.. நாம சரியா இருந்தாதான சிஸ்டம் சரியா இருக்கும் என பேசியுள்ள வசனம் தான் தற்போது சமூக வலைதளத்தில் விவாதத்தை கிளப்பி உள்ளது.

ரஜினியை டார்கெட் செய்ய வேண்டும் என்றே இப்படியொரு வசனத்தை படத்தில் வைத்தார்களா? என்கிற கேள்வியும், வலிமை படம் தியேட்டரில் வெளியாகி உள்ள நிலையில், அதன் காட்சிகளை எப்படி ரசிகர்கள் செல்போன் மூலம் வீடியோவாக எடுத்து இப்படி ஷேர் செய்கின்றனர் என்கிற கேள்வியும் தற்போது விவாதத்துக்கு உள்ளாகி உள்ளது!