சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரியின் எழில் மிகு கடற்கரை பகுதியில் கட்டுப்பாடின்றி குப்பை கொட்டப்படுவதால் சுற்றுப்புற சூழல் வேகமாக பாதிக்கப்படுகிறது.

சன்செட் வியூ பாயிண்ட் நோக்கிச் செல்லும் பாதையில் வீட்டு கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் மட்டுமன்றி கட்டுமான வேஸ்ட் பொருட்களும் பெருமளவில் கொட்டப்பட்டு கடற்கரை குப்பை கிடங்காக மாறியுள்ளது. உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் பார்வையிடும் இந்த கடற்கரை மாசுபடுவது சுற்றுலா இமேஜையும் உள்ளூர் பொருளாதாரத்தையும் பாதிக்கும் அபாயம் உருவாக்குகிறது.
திடக்கழிவு மேலாண்மை விதிமுறைகளை அமல்படுத்த மாவட்ட நிர்வாகமும் நகராட்சி அதிகாரிகளும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.