ஜாதி அரசியலைச் சொல்லி, போஸ்டர் கலாச்சாரத்தை உருவாக்கி, அதிமுக கட்சிக்குள் தன் பெயரை நிலைநாட்டிக் கொள்வதற்கு சித்து வேலை செய்கிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனைப் பற்றி குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
இதுபற்றி கூடுதல் விவரம் அறிய விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அதிமுக நிர்வாகிகளிடமும், மூத்த ர.ர.க்களிடமும் தொடர்பு கொண்டு பேசினோம்..,


கடந்த சில தினங்களுக்கு முன்பு எங்க அம்மா பிறந்தநாளை விருதுநகரில் பெரும் விமர்சையாகக் கொண்டாடினோம். அந்தக் கொண்டாட்டத்தின் நிகழ்வின் தொடர்ச்சியாக நலத்திட்ட உதவிகளும், பொதுக்கூட்டமும் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டம் மாவட்டச் செயலாளராகிய கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு அழையா விருந்தாளியாகவும், விருப்பமில்லாத விருந்தாளியாகவும் விருதுநகரில் பெயருக்கு குடி கொண்டிருக்கும் முன்னாள் எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர், தற்போதைய கொள்கை பரப்புச் செயலாளர் நான் மட்டும்தான் என்று சொல்லி வரும் மாஃபா பாண்டியராஜன் கலந்து கொண்டார். எங்கள் மாவட்டச் செயலாளர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வந்துட்டாரே என்று இன்முகத்தோடு ‘வாங்க உட்காருங்க’ என்று இருக்கையிலும் அமர வைத்து மரியாதையும் கொடுத்தார். அதைப் புரிந்து கொள்ளாத மாஃபா பாண்டியராஜன் மாவட்டத்திற்குள் ஒரு பிரளயத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு, தன் ஆதரவாளர்களை வைத்து புத்தம் புதிய சால்வையை தனக்குத் தானே போடச் சொல்லியும், அண்ணன் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு பழைய சால்வையை அக்குளில் வைத்துக் கொண்டு மாஃபா பாண்டியரான் ஆதரவாளர்கள் அணிவிக்க வந்தனர். அதற்காக கே.டி.ராஜேந்திரபாலாஜி, ‘ஏன்பா இப்படி பண்றீங்க’ என்று சத்தமிட்டார். ஒரு சின்ன சலசலப்பு மட்டும்தான் ஏற்பட்டது. இதைப் பார்த்துக் கொண்டே இருந்த மாஃபா பாண்டியராஜன் தன் ஆதரவாளர்களை சத்தம் போடாமல் அமைதியாக கூட்டத்தில் இருந்து கிளம்பி விட்டார். இவ்வளவுதான் அன்று நடந்த பிரச்னை. இதை மனதில் வைத்துக் கொண்டு முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு இவ்வளவு மரியாதையா? என்று மனதில் விஷத்தன்மையை வளர்த்துக் கொண்டு தேவரினத்தைச் சேர்ந்த தொண்டனை, கே.டி.ராஜேந்திரபாலாஜி அடித்து விட்டார் என்று தூண்டி விட்டும், நாடார் சமூகத்தைச் சேர்ந்த அமைச்சரை இழிவுபடுத்துகிறார் என்றும் விருதுநகர் மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
ஆனால், உண்மையான தேவரின சமூகத்தினர் தற்போது இந்தப் பிரச்னையில் ஏன் இப்படி மாஃபா அரசியல் செய்கிறார் என்று கொதித்தெழுந்து, புலித்தேவன் எழுச்சிப்படையினர் ‘போராட்டத்தை தூண்டாதே’ ‘விருதுநகருக்கு டூரிஸ்ட் போல் வந்து சென்று நேரம் பார்த்து கட்சி தாவும் பாண்டியராஜனே ஜாதி அரசியலை தூண்டாதே அதிமுக எம்.ஜி.ஆர் எனும் சிவன் சொத்து இங்கே ஜாதி அரசியலுக்கு வேலை இல்லை…இங்கே அனைவரும் சமம். திருந்திக் கொள் இல்லை…வன்மையாக திருத்தப்படுவாய்’ என விருதுநகர் மாவட்டம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. ஆனா, இந்த பிரச்னைக்கெல்லாம் காரணம் யாருன்னா, அகில இந்திய வல்லரசு பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் பி.என்.அம்மாவசித்தேவர்தான் என்று கூறத் தொடங்கியதோடு,
மேலும் பேசத் தொடங்கிய மூத்த ர.ர.க்கள்..,

எழுத்துப் பிழைகளோடு போஸ்டர் காவல்துறைக்கு பதிலாக கவால்துறை னு அடிக்கப்பட்டு சுவர்களில் ஒட்டப்பட்டுள்ளது.
‘தேவரினத்தை இழிவுபடுத்தி பேசி, பொதுமேடையில் தாக்கிய அண்ணா தி.மு.க.வைச் சேர்ந்த கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது கவால்துறையே நடவடிக்கை எடு! என்ற போஸ்டரை ஒட்டி, திமுக ஆதரவோடும், மாஃபா பாண்டியராஜன் ஆதரவோடும் கட்சிக்குள் பிரளயத்தை ஏற்படுத்தி வருகிறார். நாங்க எப்பயுமே அண்ணன் எடப்பாடி வழியிலயும், நாங்கள் பெரிதாக மதிக்கிற கே.டி.ராஜேந்திரபாலாஜி வழியிலயும்தான் நடப்போம். எங்க அதிமுக கட்சியில உண்மையான உணர்வுகளோடு அடிமட்டத் தொண்டனா நாடார், தேவர் என அனைத்து சமூக மக்களும் ஒற்றுமையா இருக்காங்க. இவங்க எல்லாரும் மூன்றெழுத்து மந்திரமான எம்.ஜி.ஆரையும், புரட்சித்தலைவி அம்மாவையும் தெய்வமாதான் பார்த்துக்கிட்டிருக்காங்க. சமூகத்தின் பெயரைச் சொல்லி பிரச்னையை விஸ்வரூபமாக்க நினைக்கிறது தப்பு. ஏன்னா, அதிமுக ஜாதிக்கு அப்பாற்பட்ட இயக்கம். முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இந்த ஜாதியை சொல்லி அரசியல் பண்றத நிறுத்திக்கலன்னா பின்விளைவுகள் அவருக்குத்தான். கொடுத்துக் கொடுத்து சிவந்த கரங்களால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி அதிமுக. இதை நாங்கள் அரசியல் டுடே இணையதள பத்திரிகை மூலம் சொல்லிக்கிறோம் என்றனர் வேகமாக.
இக்குற்றச்சாட்டு குறித்து முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை தொடர்பு கொண்டோம். தொடர்பு துண்டிக்கப்படவே அவரது ஆதரவாளர்களிடம் பேசினோம்..,

எங்க அண்ணன் மாஃபா பாண்டியராஜன் விருதுநகர் தொகுதிக்குள்ள வந்து அரசியல் செய்யக் கூடாதுன்னு சொல்றதுக்கு இவங்க யாரு? இதுக்கு மேல நாங்க கருத்து சொல்ல விரும்பல என்றனர் கூலாக.

திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் உடன் அம்மா வாசித்தேவர்
எது எப்படியோ ஜாதி பெயரைச் சொல்லி அரசியல் செய்பவர்கள் சம்மந்தப்பட்ட கட்சிக்கு கெட்ட பெயரைத்தான் விளைவிக்கும். இதை முழுமையாக உணர்ந்தால் சம்மந்தப்பட்ட கட்சிகளுக்கு வெற்றி நிச்சயமே!.













; ?>)
; ?>)
; ?>)