• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

பாலிவுட்டுக்கு பறக்கிறாரா பா.ரஞ்சித்?

சார்பட்டா பரம்பரை படத்திற்கு முன்பாகவே பாலிவுட்டில் இயக்குநர் பா. ரஞ்சித் பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்கப் போவதாக அறிவிப்புகள் வெளியான நிலையில், அந்த படத்தின் ஷூட்டிங் குறித்து தகவல் தற்போது வெளியாகி உள்ளது. மேலும், சியான் விக்ரமின் புதிய படத்தையும் பா.ரஞ்சித் இயக்க உள்ள நிலையில், எந்த படத்தை முதலில் முடிப்பார் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

காலா படத்தை மும்பை பேக்ரவுண்டாக கொண்டு இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கிய நிலையில், இந்தி படங்களை இயக்கும் சூழல் உருவாகின. அப்போது பா.ரஞ்சித்தை அணுகிய நமா பிக்சர்ஸ் இயக்கத்தில் புதிய படத்தை தயாரிக்க ஒப்பந்தம் செய்தனர். ஆனால், அந்த படத்தை அப்போதைக்கு பா ரஞ்சித் ஆரம்பிக்கவில்லை. சார்பட்டா பரம்பரை படத்தின் மீது முழு கவனத்தை செலுத்திய பா.ரஞ்சித், அப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில், மீண்டும் பிர்ஸா முண்டா படம் பக்கம் திரும்பி உள்ளார்.

சியான் விக்ரமின் 60வது படத்தையும் பா ரஞ்சித் இயக்கவுள்ள நிலையில், பிர்ஸா முண்டா படம் எப்போது துவங்கும் என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் அந்த படம் துவங்கும் என அதன் தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர். மேலும், இதுபோன்ற சமூகத்திற்கு தேவையான கருத்துள்ள படங்களை தயாரிப்பது தான் தங்கள் நிறுவனத்தின் நோக்கம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.