இலங்கையின் 26 வது பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே இம்மாத இறுதியில்இந்தியா வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இலங்கையில் நடைபெற்று வரும் தொடர் போராட்டங்களின் எதிரொலியாக பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளார். ஆனால் அதிபர் பதிவியிலிருந்து கோத்தபய ராஜபக்தே ராஜினாமா செய்யவில்லை. அரசுக்கு எதிராக போராடியவர்களுக்கும் மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்களுக்கும் இடையே வெடித்த மோதல் வன்முறையாக மாறியதில் இலங்கை பற்றி எரிந்தது. அம்பன்தோட்டாவில் உள்ள அதிபர் கோத்தபய ராஜபக்சே, மகிந்த ராஜபக்சே ஆகியோரின் குடும்ப வீட்டை போராட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தினர். ஆளுங்கட்சி எம்.பி. அமரகீர்த்தி அத்துகோரளாவும், அவரது பாதுகாவலரும் பலியாகினர். வன்முறைகளில் மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர்.
இதற்கிடையே, எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா .ரணில் விக்ரமசிங்கே ஆகியோர்பிரதமர் பதவி ஏற்க தயார் என்று அறிவித்தனர் . இதையடுத்து அதிபர் முன்னிலையில் நாட்டின் 26-வது பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இந்தியா வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இம்மாத இறுதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வர உள்ளதாக தகவல் கிடைத்து உள்ளதாக கூறப்படுகின்றது.
ராஜபக்சேமற்றும் மற்றும் கோத்தபய ராஜபக்சே சீனா ஆதரவாளர்கள்என்றால் ரணில்விக்ரமசிங்கே இந்திய ஆதரவாளர். எனவே அவரது முதல் வெளிநாட்டுபயணம் இந்தியாவாக இருக்கிறது. மேலும் இலங்கையின் பொருளாதாரவளர்ச்சிக்கு கூடுதலாக கடன் கேட்ககூடும் என எதிர்பார்க்கலாம்.