• Mon. Dec 15th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இளையராஜா தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கிறாரா?

ரஜினிகாந்த் அண்ணாத்த படத்துக்கு அடுத்து மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் என்றும் அதற்காக நல்ல கதையைக் கொண்ட இயக்குநரைத் தேடும் பணி நடந்துகொண்டிருக்கிறது அண்ணாத்த எதிர்பார்த்த வசூல் இலக்கை எட்டவில்லை என்பதால் அவரது சம்பளத்தை குறைக்க வேண்டும் என்று சன்பிக்சர்ஸ் கோரிக்கை வைக்க அதையும் அவற் ஏற்றுக்கொண்டார் என்று தகவல்கள் வெளியானது

இது ஒரு பக்கம் பேச்சுவார்த்தை கதை தேடல், இயக்குனர் தேர்வு என வேலைகள் நடந்துகொண்டிருக்க இந்தி நடிகர் அமிதாப் பச்சன் நடித்த ‘சீனி கம்’, ‘பா’ மற்றும் ‘ஷமிதாப்’ ஆகிய படங்களை இயக்கிய பால்கி, தற்போது துல்கர் சல்மான் நடித்துள்ள ‘சுப்: ரிவெஞ்ச் ஆஃப் தி ஆர்ட்டிஸ்ட்’ படத்தை இயக்கி வருகிறார்.

அவர், ரஜினிகாந்தை வைத்து ஒரு இந்தியப்படம் எடுக்கவிருக்கிறார் என்றும் அப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார் என்றும் தகவல்கள் வெளியானது தயாரிப்பாளர் யார் என்பது பற்றிய தகவல் மட்டும் வெளியாகவில்லை இந்த நிலையில் அதற்கு விடை கிடைக்கும் வகையில்பால்கி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருப்பது உண்மைதான் என்றும் அப்படத்துக்கு இளையராஜா இசையமைப்பது மட்டுமின்றி அப்படத்தைத் தயாரிப்பதே இளையராஜாதான் என்றும் தகவல் வெளியாகியுள்ளது இளையராஜாபாவலர் கிரியேஷன்ஸ் என்கிற படநிறுவனம் மூலம் பல படங்களைத் தயாரித்திருக்கிறார் ஆனால் எந்தப்படமும் வெற்றிபெறவில்லை.

அதனால் படத்தயாரிப்பை அவர் தொடரவில்லை இப்போது மீண்டும் படம் தயாரிக்கவிருப்பதாகவும் அதில் ரஜினிகாந்த் நடிக்கவேண்டுமென்றும் இளையராஜா கேட்க அதற்கு ரஜினிகாந்த் சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்றும் சொல்கிறார்கள்.இதனால் இளையராஜாவுக்கும் ரஜினிகாந்த்துக்கும் இணக்கமான பால்கி உள்ளே வந்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.