• Fri. Apr 26th, 2024

உத்திரப்பிரதேச மாநிலத்தின் முதல்வர் வேட்பாளராக உருவெடுக்கிறாரா பிரியங்கா?

உத்திரப்பிரதேசமாநில சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் முக்கிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவருகின்றன.

ஏற்கனவே காங்கிரஸ் சார்பில் பெண்களுக்கான பிங்க் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, நேற்று (ஜனவரி 22) இளைஞர்களுக்கான தேர்தல் அறிக்கையை ராகுல் காந்தியோடு சேர்ந்து வெளியிட்டார்.

முதல்வர் வேட்பாளர் யாராக இருப்பார்கள் என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த பிரியங்கா காந்தி,

நீங்கள் வேறு எந்த காங்கிரஸ் தலைவரின் முகத்தையும் பார்க்கிறீர்களா… உ.பி.யில் எங்கு பார்த்தாலும் அது என் முகம் மட்டுமேஎன்று பதிலளித்தார் பிரியங்கா. இதில் இருந்து உத்திரப்பிரதேச தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பிரியங்காதான் முன்னிறுத்தப்படுகிறார் என்பதை மறைமுகமாக பிரியங்கா காந்தி தெளிவுபடுத்தியிருக்கிறார்

பிரியங்கா காந்தி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போகும் தொகுதி எது என்ற கேள்விக்கு

அது முடிவு செய்யப்படும் போது, ​​உங்களுக்குத் தெரியும். நாங்கள் இன்னும் அது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்றார் பிரியங்கா காந்தி

தொங்கு சட்டசபை ஏற்பட்டால், தேர்தலுக்குப் பிறகு மற்ற எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் தயாராகுமா என்ற கேள்விக்கு,

அப்படிப்பட்ட சூழ்நிலைகள் ஏற்பட்டால் மற்றும் அவர்கள் அவ்வாறு செய்தால், நாங்கள் அதைப் பரிசீலிக்கத் தயாராக இருக்கிறோம். அத்தகைய சூழ்நிலை ஏற்பட்டால், நாங்கள் நிச்சயமாக இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கான எங்கள் நிகழ்ச்சி நிரல் நிறைவேற்றப்பட வேண்டும் என்று நான் கூறுவேன் என்றார் பிரியங்கா காந்தி

மேலும் இளைஞர் தேர்தல் அறிக்கை பற்றி பேசிய ராகுல் காந்தி, ‘உ.பி.யில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான காங்கிரஸ் கட்சியின் உத்தி குறித்த விவரங்களை இந்தத் தேர்தல் அறிக்கை அளித்துள்ளது.

நாங்கள் 10 லட்சம் வேலைகள், 20 லட்சம் வேலைகள்… 40 லட்சம் வேலைகள் கொடுப்போம் என்று வெறுமனே கூறவில்லை, ஆனால் அதை உங்களுக்கு எப்படி தருவோம் என்று கோடிட்டுக் காட்டியுள்ளோம். உத்தரபிரதேசத்தில் தினமும் சராசரியாக 880 பேர் வேலை இழக்கின்றனர். கடந்த 5 ஆண்டுகால பாஜக ஆட்சியில் 16 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக பிரதமர் வாக்குறுதி அளித்ததை நினைவில் கொள்ளுங்கள், என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *