• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பிரஷர் குக்கரில் சமைத்தால் இவ்வளவு ஆபத்தா?

குறுகிய காலத்தில் உணவை சமைக்க உதவுவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது பிரஷர் குக்கர்! எனினும், சில நேரங்களில் குக்கர் ஆனது, பெரிய ஆபத்துக்களை ஏற்படுத்தக்கூடும் என்பதை பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை! பிரஷர் குக்கரைப் பயன்படுத்துவோர், ஆபத்துக்களைத் தவிர்க்க சில உணவுப் பொருட்களை அதில் சமைக்காமல் இருப்பது நல்லது!

அரிசி
குக்கரில் அரிசியை சமைப்பதால், அக்ரிலாமைடு என்ற தீங்கு விளைவிக்கும் கெமிக்கல் உருவாகி, பல தீங்கு விளைவிக்கும் நோய்களுக்கு வழிவகுப்பதாக கூறப்படுகிறது. இதனால் உடல் எடை கூடி ஆபத்தான நோய்களை உண்டாக்கும் என்று கூறப்படுகிறது!

உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கில் மாவுச்சத்து உள்ளது. எனவே இதை குக்கரில் சமைக்கக்கூடாது. பிரஷர் குக்கரில் உருளைக்கிழங்கை சமைப்பது ஆரோக்கியத்தை கெடுக்கும். மேலும், புற்றுநோய் மற்றும் நரம்பியல் கோளாறு போன்ற பல உடல்நல நோய்களுக்கு வழிவகுக்கும்.

முட்டை
பிரஷர் குக்கரில் முட்டைகளை வேக வைக்கும் போது பெரிய விபத்து ஏற்படும் வாய்ப்புள்ளது. முட்டைகளை வேக வைப்பதற்கு அதிக வெப்பநிலை தேவைப்படுகிறது. எனவே அதிக வெப்பநிலையில் வைத்து முட்டைகளை குக்கரில் சமைத்தால் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்று கூறப்படுகிறது!

மீன்
பொதுவாக மீன் வேகமாக வெந்துவிடும். அத்தகைய மீனை குக்கரில் ஒருபோதும் சமைக்கக்கூடாது. ஏனெனில் மீன் சற்று அளவுக்கு அதிகமாக வெந்துவிட்டால், அதன் சுவையே கெட்டுவிடும். அதோடு மீனில் உள்ள சத்துக்களும் அழிந்துவிடும். எனவே மீனை குக்கரில் சமைக்காதீர்கள்.

பிரஷர் குக்கரில் எப்போதும் சமைக்கும் போதும், குக்கரை மூடிய பின் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
பிரஷர் குக்கரைத் திறப்பதற்கு முன்பும் கவனமாக இருக்க வேண்டும். அடுப்பில் இருந்து குக்கரை இறக்கிய பின் குறைந்தது 15 நிமிடங்கள் காத்திருந்து பின் மூடியைத் திறக்கவும். மிகவும் பழமையான பிரஷர் குக்கர்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். ஏனெனில் இது விபத்துக்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கும்.