தமிழக அமைச்சரவையிலிருந்து செந்தில்பாலாஜியை ஆளுநர் ரவி நீக்க உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து அரசியல் வட்டாரத்தை பெரும் பரபரப்கை கிளப்பியிருக்கின்றது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் பதலடி கொடுப்பதாக ஆளுநர் உத்தரவெல்லாம் எங்களுக்கு கட்டுபடாது என்று பகிரங்கமாக அறிவித்து இருக்கின்றார். இதைத் தொடர்ந்து மிகப்பெரிய ஆலோசனை நடந்து முடிந்த பின்பு ஆளுநரின் அறிக்கை குறித்து உச்சநீதிமன்றம் செல்ல திமுக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.