எதிர்க்கட்சித் துணைத்தலைவர் பதவி பிரச்சனையை இபிஎஸ் இவ்வளவு பெரிதுபடுத்துவதற்கு தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த விசாரணை ஆணைய அறிக்கையே காரணம் என்று கூறப்படுகிறது. பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் துப்பாக்கிச் சூடு குறித்து அப்போதைய முதலமைச்சரான இபிஎஸ் சொன்ன சில விஷயங்கள் தவறாக இருந்துள்ளன. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது. இதை திசைதிருப்பவே இபிஎஸ், ஓபிஎஸ்ஐ வைத்து கேம் ஆடுகிறாராம்.