• Thu. Jun 1st, 2023

தங்க கடத்தல் வழக்கில் பிக்பாஸ் பிரபலமா? ஓ.. ஹோ!..

Byகாயத்ரி

Feb 5, 2022

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முக்கியமான போட்டியாளர்களில் ஒருவர் அக்ஷரா ரெட்டி. பிக்பாஸ் வீட்டில் 70 நாட்களுக்கு மேல் தாக்கு பிடித்து பைனல் வரை வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென வெளியே அனுப்பப்பட்டார்.

அக்ஷரா ரெட்டி ஒரு மாடல் ஆவார். மாடலிங் மற்றும் நடிப்பில் ஆர்வம் கொண்ட அவர் 150 க்கும் மேற்பட்ட மேடைகளில் ராம்ப் வாக் செய்துள்ளார். அக்ஷரா ரெட்டி மிஸ் இந்தியா சவுத் போட்டியில் பங்கேற்று பட்டத்தையும் வென்றார்.

இந்தியாவின் பிரதிநிதியாக சர்வதேச அழகிப்போட்டியான மிஸ் சூப்பர் குளோப்-வேர்ல்ட் 2019 என்ற பட்டத்தை வென்றார். மிக இளம் வயதிலேயே மாடலாக தனது வாழ்க்கையை ஆரம்பித்த அக்ஷரா 2017 முதல் டோலிவுட் துறையில் இருக்கிறார்.

அவரது முதல் படம் ‘ஹேப்பி நியூ இயர்’ என்று பெயரிடப்பட்டது. அக்ஷராவுக்கு தற்போது தமிழ் படங்களில் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.தற்போது அக்ஷரா ரெட்டி தங்கம் கடத்திய வழக்கில் சிக்கியுள்ளார்.

கொச்சி விமான நிலையம் வழியாக 20 கிலோ தங்கம் கடத்திய வழக்கில் அக்ஷரா ரெட்டியிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

2013ம் ஆண்டு நகைக்கடை உரிமையாளர்களுக்கு தங்கம் கடத்திய வழக்கில் கோழிக்கோடு சுங்கத்துறை அதிகாரிகள் அக்ஷரா ரெட்டியை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *