• Fri. Mar 27th, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

அ.தி.மு.க பெரிய கட்சியா ? பா.ஜ.க பெரிய கட்சியா?

BySeenu

Apr 21, 2025

கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஆனந்த் சீனிவாசன், ஆய்வு பிரிவு பொறுப்பாளர் அமிதாப் துபே ஆகியோர் நேசனல் ஹெரால்ட் பத்திரிகை தொடர்பான வழக்கு குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பேசிய அவர்கள் :-

நேசனல் ஹெரால்ட் வழக்கில் சோனியா ராகுல் ஆகிய இருவரும் எந்த தவறும் செய்ய வில்லை இந்த வழக்கை தொடுத்த சுப்பிரமணியசாமி வழக்கை திரும்ப பெற்று விடுவார் என்ற அச்சத்தில் இந்த வழக்கை தற்போது விரைவு படுத்துகின்றனர்.
இந்த வழக்கில் உரிய நியாயம் கிடைக்கும் என தெரிவித்த அவர்கள்,
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக போடபட்ட இந்த வழக்கு குறித்து
மத்திய பா.ஜ.க அரசு, அமலாக்க துறை ஆகியவற்றிக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கின்றோம்.

அறக்கட்டளைகளால் ஆரமிக்கப்பட்ட கம்பெனி என்றால் அதில் தனிப்பட்ட நலன்களை செய்ய முடியாது , இதில் பணபரிவர்த்தை ராகுல், சோனியா பெயரில் இல்லலை , அதில் இருந்து எந்த பலன்களையும் பெறவில்லை. பண பரிவத்தனைகள் இல்லை எனில் இதில் அமலாக்க துறைக்கு என்ன வேலை ? எனவும் கேள்வி எழுப்பினர்.

அதானி மீது அமெரிக்கா வழக்கு தொடர்ந்து உள்ள நிலையில், அவர்களிடம் ஏன் அமலாக்க துறை விசாரிக்க வில்லை என கேள்வி எழுப்பிய அவர்கள்,
தமிழகத்தில் அண்ணாமலை, நயினார் பேச்சை கேட்காதவர்களையும், இந்திய அளவில் மோடி பேச்சை கேட்காதவர்கள் மீதும் அமலாக்க துறை பயன்படுத்தபடுகின்றது.
அமலாக்க துறை தொடுக்கும் 100 வழக்குகளில் 95 வழக்குகள் தோற்று இருக்கின்றது.
சுப்பிரமணியசாமியே மோடிக்கு எதிராக மாறி விட்டார், இந்த வழக்கை அவர் நடத்த மாட்டார் என்பதால் மத்திய அரசு இதை கையில் எடுத்து இருக்கின்றது.

அமலாக்க துறை வைத்து அ.தி.மு.க வை மிரட்டுவதாக இணைய ஊடகங்களில் செய்திகள் ஏராளமாக இருக்கின்றது.

எடப்பாடி பழனிச்சாமி ஏன் கூட்டணியை அறிவிக்க வில்லை, தமிழகத்தில் அமலாக்க துறை விளையாடுகின்றது , அ.தி.மு.க பெரிய கட்சியா ? பா.ஜ.க பெரிய கட்சியா? எனவும் கேள்வி எழுப்பி அவர்கள், நேசனல் ஹெரால்ட் பத்திரிகையினை விற்க போவதில்லை என கட்சி சொல்லி இருக்கின்றது சட்ட ரீதியாக இந்த வழக்கை எதிர்கொள்வோம் எனவும் தெரிவித்தனர்.