• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கைவிடப்படுகிறதா அட்லி-ஷாருக் படம்?!?!

ஷாருக்கானை வைத்து படம் இயக்க இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகக் காத்திருக்கும் அட்லி இப்போது அந்த படத்துக்கான வேலைகளில் பிஸியாக இருக்கிறார்.

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில், அட்லி இயக்கும் திரைப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் புனேவில் தொடங்கியது. படப்பிடிப்பில் நயன்தாரா, ஷாருக்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த படத்துக்காக மும்பையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருகிறார் அட்லி. இந்நிலையில் இந்த படம் கைவிடப்பட்டதாக இணையத்தில் வதந்திகள் பரவி வருகின்றன.

அதற்கு பதிலளிக்கும் விதமாக இயக்குனர் அட்லி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் ‘ஒருநாள் உங்களைத் தவறாக நடத்தியவர்கள் வருத்தப்படும் நாள் வரும். என்னை நம்புங்கள் கண்டிப்பாக அந்த நாள் வரும்’ எனக் கூறியுள்ளார். இதன் மூலம் படம் நிறுத்தப்படவில்லை என்பதை பதிலாக கொடுத்துள்ளார் அட்லி. அட்லி இயக்கும் இந்த படத்தில் நிறைய தமிழ்க் கலைஞர்கள் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.