
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. தற்போது இவர், பயணி என்ற ஆல்பம் பாடலை உருவாக்கி வருகிறார்.
இந்த ஆல்பம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளிலும் உருவாகி வருகிறது! இப்பாடலுக்கு அன்கித் திவாரி இசையமைத்துள்ளார். மேலும் தமிழில் அனிருத்தும், மலையாளத்தில் ரஞ்சித் கோவிந்தும், தெலுங்கில் சாகரும், இந்தியில் அன்கித் திவாரியும் இப்பாடலை பாடியுள்ளனர்.
இந்நிலையில் இந்த ஆல்பம் பாடலுக்கு வாழ்த்துக் கூறி பிரபுதேவா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “வணக்கம் பப்பு, உங்களுக்கெல்லாம் அவங்க ஐஸ்வர்யா, ஆனா எனக்கு அவங்க எப்பவுமே பப்புதான். அவங்க 9 வருஷம் கழித்து ஆல்பம் செய்துள்ளார். பப்பு அவ்வளவு சீக்கிரம் எதையும் ஒத்துகொள்ள மாட்டார். அப்படி இருக்கவங்களே ஆல்பம் பாடல் உருவாக்கி, அதனை நான்கு மொழிகளில் வெளியிடுகிறார் என்றால் அது சூப்பராகதான் இருக்கும்” என கூறியுள்ளார்.
இந்நிலையில் வாழ்த்துக் கூறிய பிரபுதேவாவிற்கு ஐஸ்வர்யா நன்றி கூறி அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.



