விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற இருக்கன்குடி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த திருவிழாவை காண தமிழகம் மற்றும் தென் மாநிலங்களில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

இந்த நிலையில் இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் கோவில் ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்த நிலையில் ஆடி கடைசி வெள்ளி திருவிழாவை முன்னிட்டு அருள்மிகு ஸ்ரீ மாரியம்மனுக்கு நாள் தோறும் சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
மேலும் இருக்கன்குடி மாரியம்மன் கோவிலின் ஆடி கடைசி வெள்ளி திருவிழாவின் முக்கிய நிகழ்வான அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வைப்பாற்றில் இறங்கி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் வைப்பாற்றில் இறங்கும் நிகழ்ச்சியின் போது அம்மன் பச்சை பட்டு உடுத்தி பக்தர்களுக்கு காட்சி அளித்ததால் இந்தாண்டு நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கும் என பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். எந்த ஒரு கோவிலும் இல்லாத ஒரு சிறப்பு அம்சம் ஆக மாட்டு வண்டியில் மேளம் அடித்து ஊர்வலமாக அம்மனை அழைத்து வரபட்டது

மேலும் ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழாவை முன்னிட்டு தென் தமிழகத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் கோவிலுக்கு வந்து தங்களுடைய நேர்த்தி கடனை செலுத்தினார்கள்.
மேலும் இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் கோவில் ஆடி கடைசி திருவிழாவை முன்னிட்டு தென் தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
மேலும் விருதுநகர் மாவட்ட எஸ்பி கண்ணன் தலைமையில் நான்கு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 1500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.