விருதுநகர் நகராட்சியில் வரிவசூலில் நகராட்சி ஊழியர்கள் முறைகேடு நடைபெறுவதை அடுத்து விருதுநகர் நகர்மன்ற தலைவர் அதிரடி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
விருதுநகர் நகர்மன்ற தலைவர் ஆர்.மாதவன்வெளியிட்டுள்ள அறிக்கையில்…விருதுநகர் நகராட்சியில் புதிதாக போடப்படும் சொத்துவரி,தொழில்வரி,பெயர்மாற்றம் ரசீது, மற்றும் புதிய வீடுகட்டுவதற்கான பிளான் ஆகியவை நகராட்சி ஊழியர்களால் பேரம் பேசப்படுவதாக புகார் வந்துள்ளது.
எனவே அந்தந்த வார்ட் உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் கண்காணிப்பில் சொத்துவரி,தொழில்வரி,பெயர்மாற்றம் ரசீது, மற்றும் புதிய வீடுகட்டுவதற்கான பிளான் ஆகியவை இருக்கவேண்டும்.நகர் மன்ற உறுப்பினர் கண்காணிப்பு இல்லாமல் எதேனும் நடந்து இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் .மேலும் ஒருமாதத்திற்கு மேலாக இருக்கும் கோப்புகள் நகர்மன்ற தலைவர் கவனத்திற்கு கொண்டுவரவேண்டும் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.