• Mon. Dec 15th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இரிடியம் ஆசை காட்டி அண்ணனிடம் கண்ணாம்பூச்சி ஆடிய தம்பி கூட்டாளிகளுடன் கைது

சிவகங்கை மாவட்டம் சித்தலூர் கிராமத்தில் நேற்று நிலம் வாங்க வந்தவர்களிடம் இரு சக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கத்தி காட்டி மிரட்டி ரூபாய் 23 லட்சத்து 50 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பிய சம்பவத்தில் தம்பியே அண்ணனிடம் நாடகமாடியது தெரிய வந்துள்ளது.


மதுரை திருமங்கலம் அருகே நேசநெறி கிராமத்தை சேர்ந்த சகோதர்கள் குருசாமி ஆறுமுகம். இவர்கள் இருவரும் இட புரோக்கர்கள் திருச்சி அப்துல் ரகுமான் உடுமலைப்பேட்டை சாமிநாதன் என்பவர்களுடன் நிலம் வாங்க காரில் உடன் வந்துள்ளனர்.


மதுரை – சிவகங்கை சாலையில் வந்த போது இடபுரோக்கர் அப்துல் ரகுமான் சித்தலூர் கிராமத்தில் கோவில் அருகே இரிடியம் இருப்பதாக கூறி இருவரையும் அழைத்து சென்றுள்ளனர். அங்கு இரண்டு இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த மூன்று நபர்கள் கத்தியை காண்பித்து மேற்படி ஆறுமுகம் ,குருசாமி வைத்திருந்த 23 லட்சத்து 50 ஆயிரத்தை பறித்து சென்றனர்.

ஆறுமுகமும், குருசாமியும் பூவந்தி காவல் நிலையத்தில் புகார் அளித்ததனர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில் குமார் உத்தரவின் பேரில் 3 தனிபடை அமைத்து சிவகங்கை போலீசார் 9 மணி நேரத்தில் 9 குற்றவாளிகளை கைது செய்தனர் விசாரணையில் ஆறுமுகத்தின் சகோதரர் குருசாமி நண்பர்களுடன் சேர்ந்து நாடகம் ஆடியது அம்பலமானது. தற்போது குருசாமியுடன் அவரது கூட்டாளிகளை கைது போலீசார் சிறையில் அடைத்தனர்.