கொடுநாடு எஸ்டேட் கொலை கொள்ளை வழக்கு விசாரணை உதகை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நீதிபதி முரளிதரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜித்தின் ஜாய் நேரில் ஆஜராகினார்,

அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் மற்றும் கனகராஜ் சார்பில் கொலை, கொள்ளை வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாலும், இன்டர்போல் விசாரணை அறிக்கை இன்னும் கிடைக்காததால் அரசு தரப்பில் நீதிபதியிடம் கூடுதல் கால அவகசம் கேட்கப்பட்டதால் வழக்கினை எதிர்வரும் ஏப்ரல் 25ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் கூறுகையில், இன்டர் போல் விசாரணை அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை வழக்கு தொடர்பாக இதுவரை 245 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. விசாரணையின் போது கிடைக்கும் புது தகவல்களின் அடிப்படையில் மேலும் சிலரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறினார்.








