• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

போக்குவரத்து விதிமீறல்களை கண்டுபிடிக்க நவீன வாகனம் அறிமுகம்..!

Byவிஷா

Jun 2, 2023
சென்னை மாநகரில் போக்குவரத்து விதிமீறல்களை தடுப்பதற்காக கேமராக்கள் மற்றும் ஸ்பீட் கன்களுடன் கூடிய இரண்டு வாகனங்கள் போக்குவரத்து காவல்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களில் இருக்கும் கேமராக்கள் மூலம் போக்குவரத்து விதிமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டு விதிமீறலில் ஈடுபடும் நபர்களுக்கு இ-செலான் வழங்குவதற்கு முடிவு செய்துள்ளனர். இந்த வாகனங்களில் 360 டிகிரி சுழல் முறை கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால் ஒரு வாகனம் எந்த வேகத்தில் சென்றாலும் அதன் நம்பர் பிளேட்டை பதிவு செய்து வைத்துக் கொள்ளும்.
இதில் 2டி ரேடார் சிஸ்டம் இருப்பதால் ஹெல்மெட் அணியாமல் சென்றாலோ இரு சக்கர வாகனத்தில் இரண்டு நபர்களுக்கு மேல் சென்றாலும் அவர்களை தெளிவாக படம் பிடித்து விடும். இந்த கார்களில் லைட் மீட்டர் இருப்பதால் யாராவது கார்களில் டென்த் ஸ்டிக்கர் ஒட்டி இருந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இது போக ரூ. 92.62 லட்சம் மதிப்பிலான போக்குவரத்து உபகரணங்களும் போக்குவரத்து காவல்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இது உபகரணங்களை சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் வழங்கியதோடு நேற்று வாகனங்களை கொடியசைத்தும் அவர் தொடங்கி வைத்தார்