தமிழகத்தில் அனைவருக்கும் வங்கி சேவை எளிதில் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கூட்டுறவு துறை சார்பாக நகரும் கூட்டுறவு வங்கி என்ற பெயரில் வீட்டுக்கு அருகிலேயே வங்கி சேவை வழங்கும் வசதி விரிவு படுத்தப்பட உள்ளது.
கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக பயிர் கடன் மற்றும் நகை கடன் உள்ளிட்ட 17 வகை கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதேசமயம் தனியாருக்கு இணையாக இணையதள வங்கி சேவை உள்ளிட்ட டிஜிட்டல் சேவைகள் கூட்டுறவு வங்கிகளில் கிடைக்கின்றன. கிராமங்கள் மற்றும் மலைப்பகுதியில் வசிக்கும் மக்கள் வங்கி கணக்கு இருந்தாலும் ஏடிஎம் எனப்படும் தானியங்கி இயந்திரத்தில் பணம் எடுப்பதற்கும் டெபாசிட் செய்யவும் வங்கிக்கு செல்ல வேண்டியுள்ளது.
இந்நிலையில் வீட்டிலிருந்து அதிக தூரம் செல்ல வேண்டி இருப்பதால் வீட்டிற்கு அருகிலேயே வங்கி சேவை கிடைக்க 32 வாகனங்கள் மூலமாக நகரும் கூட்டுறவு வங்கி சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் சிறிய ஏடிஎம் சாதனம் இருக்கும் எனவும் வீட்டிற்கு அருகிலேயே வரும் அந்த வாகனத்தில் உள்ள ஊழியர் ஏடிஎம்மில் வாடிக்கையாளரின் விரல் ரேகையை பதிவு செய்து ஆதார் எண் சரி பார்ப்பின் மூலமாக பணம் வழங்குவார். அதனைப் போலவே வங்கிக் கணக்கிலும் பணம் செலுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கி சேவையை எளிதாக்க நகரும் கூட்டுறவு வங்கி அறிமுகம்..!
