கோயம்புத்தூரை சேர்ந்த தொழில்முனைவோரும், திரைப்பட இயக்குநருமான அருண்காந்த், Indiema.in என்ற புதிய சமூக ஊடக தளத்தை அறிமுகம் செய்தார்.
இந்த சமூக தளமானது பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையையோ அல்லது பணம் செலுத்தி செய்யப்படும் விளம்பரங்களையோ மையப்படுத்தாமல், உண்மையான படைப்பாற்றல் மற்றும் கருத்து பரிமாற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அருண்காந்தின் நிறுவனமான இன்ஃபோ ப்ளுட்டோ மீடியா வர்க்ஸ் பிரைவேட் லிமிட்டட் இரண்டரை ஆண்டுகால ஆராய்ச்சிக்குப் பிறகு இந்தத் தளத்தை உருவாக்கியுள்ளது.

இந்த வலைத்தளத்தில் கணக்கு துவங்கும் நபர்கள் அவர்கள் விரும்பும் தலைப்புகளை தேர்ந்தெடுத்து அதை மட்டும் காண முடியும் என்றும் இந்த தளத்தில் படைப்பாளிகள் பிரபலம் அடையவேண்டும் என்பதற்காக எதை எதையோ பதிவு செய்து, அதன் மூலம் பின் தொடர்பாளர்களை அதிகரிக்கவேண்டும் என்ற வழக்கமான போட்டிக்கு இடம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் பத்திரிகையாளர் சந்திப்பின்போது பேசிய அருண்காந்த் இதில் அனைவரும் இயல்பாகவே இணைக்கப்பட்டுள்ளனர், என தெரிவித்தார்.
இந்தத் தளத்தில், படைப்பாளர்கள் தங்கள் பதிவுகள் எந்த பிரிவின் கீழ் வருகின்றன என்பதை கட்டாயம் வகைப்படுத்த வேண்டும் என்றும். இதன் மூலம் பயனர்கள் தாங்கள் விரும்பும் தலைப்புகளைத் தேர்ந்தெடுக்கும் போது, அந்த பதிவுகள் அவர்களிடத்தில் எளிதாக சென்றடையும் என்றார்.
பயனர்கள் தாங்கள் விரும்பாத தலைப்புகளை எளிதாக குறித்து வைத்துக்கொள்ள வசதிகள் இதில் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இதில் பிரதமர் மோடி ஒரு கணக்கு துவங்கி எங்களுக்கு ஆதரவு கொடுப்பார் என எதிர்பார்ப்பதாக கூறினார்.













; ?>)
; ?>)
; ?>)