• Fri. Oct 16th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

ட்விட்டரில் புதிய அம்சம் அறிமுகம்..!!

ByA.Tamilselvan

Apr 15, 2023

ட்விட்டரில் பல்வேறு புதிய வசதிகள் வந்துள்ள நிலையில் மீண்டும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
10,000 கேரக்டர்களில் டுவிட் செய்யும் புதிய அம்சம் இப்போது அறிமுகமாகி உள்ளது. மேலும், இந்த டுவிட்டை பதிவு செய்த முதல் 30 நிமிடங்களுக்குள் எடிட் செய்யும் வசதி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு எலான் மஸ்க் டுவிட்டர் தளத்தை வாங்கி இருந்தார். அது முதலே புதுப்புது அப்டேட்களை அவர் கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கையை அவர் கடைபிடித்து வருகிறார். இந்த சூழலில் இந்த புதிய அம்சம் அறிமுகமாகி உள்ளது. இப்போதைக்கு இது ‘டுவிட்டர் ப்ளூ’ பயனர்களின் பயன்பாட்டுக்கு மட்டுமே கிடைக்கும் என தெரிகிறது. இவர்கள் ப்ளூ டிக் பெற்ற பயனர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.