• Fri. Apr 26th, 2024

சர்வதேச டிவி தொடர்களுக்கு ஆப்கானிஸ்தானில் தடை

Byகாயத்ரி

Dec 29, 2021

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்தே கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தலீபான்களின் இந்த செயலுக்கு உலக நாடுகளும் மனித உரிமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.இந்நிலையில், பெண்கள் ஹிஜாப் அணியாமல் ஒளிபரப்பாகும் டிவி தொடர்களுக்கு தலீபான்கள் தடை விதித்துள்ளனர். இஸ்லாமிய ஷரியா சட்டத்திற்கு எதிராக டிவி தொடர்களில் பாடல்கள், இசை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுதல், ஹிஜாப் இல்லாமல் பெண்கள் காட்டப்படுத்தலுக்கு தடை விதிக்கப்படுள்ளது.

இது போன்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் சர்வதேச டிவி தொடர்களுக்கு தலீபான்கள் தடை விதித்துள்ளனர். பெண்கள் இறுக்கமான உடை அணிந்து நடிக்கும் விளம்பரங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் கலாச்சாரம் மற்றும் ஷரியா சட்டத்திற்கு முரணான வெளிநாட்டு டிவி தொடர்களை ஒளிபரப்புவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என தலீபான்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *