சிவகாசி அருகே உள்ள பி. எஸ். ஆர். பொறியியல் கல்லூரி மற்றும் ஐ இ இஇ மெட்ராஸ் பிரிவு இணைந்து பொறியியல் துறையின் தொழில்நுட்ப வளர்ச்சி என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பி .எஸ். ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர்.சோலைச்சாமி தலைமை வகித்தார், கல்லூரியின் முதல்வர் செந்தில்குமார் கருத்தரங்கினை தொடங்கி வைத்து பேசினார்.

மின்னணுவியல் துறை தலைவர் வளர்மதி வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக ஐ .இ .இ .இ. மெட்ராஸ் பிரிவு தலைவர் பொற்குமரன் அமெரிக்கா டெக்ஸாஸ் பல்கலைக்கழக இயக்குனர் ஜெய் வீராசாமி, மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி பேராசிரியர் வேல்முருகன், நைஜீரியா லாடோக்கே அகிண்டோலா தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியர் ஓலாடுண்டே ஓலா பியிசி, சீனா கீன் பல்கலைக்கழக பேராசிரியர் பஹா இக்னைனி,அமெரிக்கா கூகுள் நிறுவனத்தைச் சேர்ந்த நிவேதிதா குமாரி ஆகியோர் கலந்துகொண்டு நவீன கணினிகள் தகவல் தொழில்நுட்ப தொடர்பான புதிய கண்டுபிடிப்புகள் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றின் உள்ள சவால்கள் குறித்து உரையாற்றினார்கள்.
இந்த கருத்தரங்கிற்கு அமெரிக்கா, மலேசியா, வங்கதேசம், உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் இருந்தும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பொறியியல் கல்லூரியில் இருந்தும் சுமார் 1200க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகள் பெறப்பட்டு அதில் 150 ஆராய்ச்சி கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கணினி பொறியியல் துறையின் துறைத்தலைவர் ,மின்னியல் துறையின் தலைவர் ஆகியோர் செய்திருந்தனர்.













; ?>)
; ?>)
; ?>)