• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

கோவையில் சர்வதேச பலூன் திருவிழா தொடக்கம்..!

Byவிஷா

Jan 13, 2024

தமிழக சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில், கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழாவை இன்று முதல் மூன்று நாட்களுக்கு நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் இந்தப் பலூன் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
குறிப்பாக இந்த ஆண்டு சுற்றுலாத்துறை சார்பில் நடத்தப்படும் பலூன் திருவிழாவில் பிரான்ஸ், ஜெர்மன், நெதர்லேண்ட் உட்பட 8 நாடுகளில் இருந்து, 11 வகையான பலூன்கள் பறக்க விடப்பட்டுள்ளன. அந்த வகையில் தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பிலும் ஒரு பலூன் பறக்க விடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த பலூன்களில் சின்னஞ்சிறுமியர், சிறுவர்களை உற்சாகப்படுத்தும் வகையில், தவளை, யானை, மிக்கி மவுஸ் உருவம் கொண்ட பலூன்கள் இடம் பெற்று இருந்தன.
இதனை நேரில் கண்டுகளித்து உற்சாகம் அடைய பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். தொடர்ந்து 3 நாட்களிலும் இங்கு காலை மாலை என இரு வேளைகளிலும் பலூன்கள் வானில் பறக்க விடப்படுகிறது.சில பலூன்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இந்த வகையான பலூன்களில் ஏற ஒருவருக்கு ரூ1500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பலூன்களில் இருக்கும் இடத்திலிருந்து வானில் உயரமாக பலூன்கள் பறக்க விடப்படுகிறது. இந்த பலூன் திருவிழாவை முன்னிட்டு உணவுத் திருவிழா மற்றும் இரவு நேரங்களில் கலை நிகழ்ச்சி என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.