• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில்,கோலாகலமான பொங்கல்விழா..!

BySeenu

Jan 13, 2024
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இணைந்து பொங்கல் வைத்து ஜமாப் இசைக்கு நடனமாடி உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அனைத்து துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் பாரம்பரிய உடை அணிந்தபடி வந்து ஆட்சியர் அலுவலகத்தில் கோலமிட்டு பொங்கல் வைத்தனர். 
மாவட்ட வருவாய் அலுவலர் சர்மிளா, சக ஊழியர்களுடன் இணைந்து கோலமிட்டு கொண்டாட்டத்தில் பங்கேற்றார். புது பானையில் பொங்கல் வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், தற்காலிக ஊழியர்கள், அதிகாரிகள் ஜமாப் இசைக்கு ஏற்றபடி நடனமாடி உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து துறை அதிகாரிகளும் இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்ற நிலையில் ஊழியர்களுக்கு கயிறு இழுத்ததல், உறி அடித்தல் உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்பட்டது.