• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு தீவிர சிகிச்சை..,அதிர்ச்சியில் காங்கிரஸ் தொண்டர்கள்..!

Byவிஷா

Mar 22, 2023

சமீபத்தில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவையடுத்து, இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில், திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக பதவியேற்றுக்கொண்டார்.
இந்நிலையில், கடந்த 15ம் தேதி திடீரென நெஞ்சுவலி காரணமாக ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்னை போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தனியார் மருத்துவமனையில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. மேலும், நேற்று பேட்டியளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஓமிக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு நலமாக உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், எக்ஸ்.பி.பி. வகை கொரோனா பாதிப்புடன் நுரையீரல் பாதிப்பும் கண்டறியப்பட்டதால் இயல்பான சுவாசம் மேற்கொள்ள முடியாமல் அவதிப்பட்டு வந்ததை அடுத்து ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை சமநிலைப்படுத்த வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.