• Sat. Jan 3rd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கோவில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணி தீவிரம்!..

Byகிஷோர்

Oct 23, 2021

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடங்களில் கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் கட்டி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனையடுத்து நீதிமன்ற அறிவுறுத்தலின்படி நில ஆக்கிரமிப்பு, கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பகுதிகளை அகற்றும்படி ஆணை பிறப்பித்தது. இதனையடுத்து கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் நிலங்களுக்கு சொந்தமான சுமார் 10 ஏக்கருக்கும் அதிகமான இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள, சுமார் 500க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வணிக வளாகங்களை அகற்றும் பணி நடைபெற்றது.

இதன் மதிப்பு சுமார் 10 கோடி அளவில் இருக்கும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோவில் நிலங்களை கையகப்படுத்தும் இப்பணியில் சாத்தூர் வருவாய் வட்டாட்சியர் வெங்கடேசன் மற்றும் பாதுகாப்பு பணிக்காக விருதுநகர் கூடுதல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் விருதுநகர் சிவகாசி உள்ளிட்ட 3 துணைக் கண்காணிப்பாளர் உட்பட சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அவசர உதவிக்கு சாத்தூர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் கோவில் நிர்வாக அலுவலர் கருணாகரன், பரம்பரை அறங்காவலர், குழு உறுப்பினர் ராமமூர்த்தி மற்றும் கோவில் பணியாளர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.