தேசிய பசுமை தீர்ப்பாயம் பட்டாசு ஆலைகளில் சட்டவிரோதமாக பட்டாசு தயிரிக்கப்படுவது குறித்தும், மீண்டும் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்து ஏற்படுவதை தடுக்கவும் தனிக் குழு அமைக்கப்பட்டு சிவகாசி சுற்றுவட்டார பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளில் தொடர்ந்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சங்கரபாண்டியபுரம், ஏழாயிரம் பண்ணை, தாயில்பட்டி, சுற்றுவட்டார பகுதியில் 20க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் விதிமுறை மீறல் காரணமாக பட்டாசு உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் நிறுத்திவைக்கப்பட்ட ஆலைகளில் அனுமதி இன்றி பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாக தொடர்ந்து தகவல் வந்ததன் பேரில் ஆய்வு செய்ததில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மூன்று ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆய்வு குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சத்திரத்தில் இருந்து குகன்பாறை செல்லும் மெயின் ரோட்டில் விஜய கரிசல் குளத்தை சேர்ந்த மஞ்சுநாத் குமார் (43) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை சமீபத்தில் பட்டாசு உற்பத்தி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆய்வு குழுவினர் தடை விதிக்கப்பட்ட பட்டாசு ஆலைகளில் ஆட்கள் நடமாட்டம் இருப்பதை பார்த்து உடனடியாக பட்டாசு ஆலையில் ஆய்வு செய்தனர்.
அங்கு விஜய கரிசலகுளத்தை சேர்ந்த வினோத்குமார்( 30) ,மதன்குமார் (32),செந்தமிழ் (30) ,இளஞ்செழியன் (38),மணிகண்டன் (30),விஜயகுமார் (45)மஞ்சுநாத் (43)ஆகிய ஏழு நபர்கள் மீது சிறப்பு படை சாத்தூர் டவுன் இன்ஸ்பெக்டர் கமல் வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.
தொடர்ந்து தயார் செய்யப்பட்ட பத்து பெட்டிகளில் இருந்த ஒரு லட்சம் மதிப்பிலான பேன்சி ரகவெடிகள் பறிமுதல் செய்தனர்.
பட்டாசு ஆலைகளில் உற்பத்தி செய்ய தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டும் அதனை கண்டு கொள்ளாமல் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பது ஆய்வில் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருவதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.