• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

600 பேரை வேலையை விட்டு தூக்கிய இன்ஃபோசிஸ்

ByA.Tamilselvan

Feb 6, 2023

புகழ்பெற்ற ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் 600 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் பணிநீக்க அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் இன்ஃபோசிஸ் நிறுவனம் சுமார் 600 புதிய ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்ஃபோசிஸ் ஒவ்வொரு காலாண்டிலும் எந்த அளவிற்கு அனுபவம் வாய்ந்த ஊழியர்களைச் சேர்க்கிறதோ, அதை விட அதிகமாகப் பிரஷ்ஷர்களைப் பணியில் சேர்க்கிறது.
அப்படி சேருவோருக்கு சில மாத பயிற்சிக்கு பின்பு தேர்வு வைக்கப்படும். அகநிலை மதிப்பீடு எனப்படும் இந்த தேர்வில் தேர்ச்சி அடையாதவர்கள் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள். அந்த வகையில் தற்போது இன்ஃபோசிஸ் இந்தத் தேர்வில் தோல்வி அடைந்ததாக சுமார் 600 பிரஷ்ஷர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இது பொதுவாக ஒவ்வொரு வருடமும் நடப்பதுதான் என்றாலும் இம்முறை எண்ணிக்கை மிகவும் அதிகம். இது தற்போது பணியில் இருக்கும் ஐடி ஊழியர்களைப் பாதிக்காது என்றாலும் ரெசிஷன் மற்றும் ஐடி துறையில் இருக்கும் மந்தநிலையின் எதிரொலியாகவே இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் 600 பேரின் பணிநீக்கம் பார்க்கப்படுகிறது.