• Mon. May 11th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

திமுக நிர்வாகிகளுக்கு தீபாவளி போனஸ் குறித்து வெளியான தகவல்..!

Byவிஷா

Nov 9, 2023

திமுக நிர்வாகிகளுக்கு கட்சித்தலைமை தீபாவளி போனஸ் வழங்குவது குறித்தான முக்கியத் தகவல் வெளியாகி உள்ளது.
திமுகவில் தற்போது அமைப்பு ரீதியாக 72 மாவட்டங்கள் உள்ளன. இதில் உள்ள நிர்வாகிகள் மிக கவனமாக தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொருவரின் பதவிகளுக்கு ஏற்றவாறு தொகை நிர்ணயிக்கப்பட்டு, பட்டியல் இறுதி செய்யப்பட்டதாம். இந்த தொகையானது மாவட்டச் செயலாளர்கள் மூலம் விநியோகிக்க திட்டமிட்டு அப்பணிகள் தொடங்கி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், பேரூராட்சி செயலாளர்கள், வார்டு செயலாளர்கள், ஒன்றிய நிர்வாகிள், வாக்குச்சாவடி கமிட்டி என ரூ.5 ஆயிரம் முதல் ரூ.1.50 லட்சம் வரை தீபாவளி பரிசுத்தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அத்தகவல்கள் கூறுகின்றன.
கட்சி மேலிடம் வழங்கிய தொகையுடன் சேர்த்து அந்தந்த மாவட்டத்து அமைச்சர்கள் தங்களது கைகளில் இருந்து குறிப்பிட்ட தொகையை சேர்த்து வழங்கவும் கட்சி மேலிடம் அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது. ஆனால், நாடாளுமன்றத் தேர்தலுக்கு செலவு செய்ய வேண்டியதிருக்கும் என்பதால், அமைச்சர்களுக்கு பதிலாக சில மாவட்டங்களில் மாவட்டச் செயலாளர்கள் ஒரு தொகையை சேர்த்து வழங்குவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.