• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நாணயங்களில் புள்ளிகள் சொல்லும் தகவல்கள்

Byவிஷா

Mar 18, 2023

ஆரம்ப காலங்களில் இந்திய ரூபாய் நோட்டுகள் நாம் நினைப்பது போல, பேப்பர்களில் தயாரிக்கப்படவில்லை. பருத்தியின் மெல்லிய நூலிழைகளால் தயாரிக்கப்பட்டது.
இந்தியாவின் முதன்முதலில் பெங்கால் பேங்க், ஹிந்துஸ்தான் பேங்க் போன்ற தனியார் வங்கி நிறுவனங்கள்தான் ரூபாய் தாள்களை அச்சிட்டு வெளியிட்டன. 18ம் நூற்றாண்டில்தான் இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் வெளிவந்திருக்கின்றன. 1934ல் ஆர் பி ஐ சட்டம் கொண்டுவரப்பட்டு, அரசாங்கமே ரூபாய் நோட்டுகளை அச்சிட முடியும் என்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆர் பி ஐ முதன் முதலாக 1938ம் ஆண்டு கிங் ஜார்ஜ் உருவப்படம் கொண்ட ஐந்து ரூபாய் நோட்டை வெளியிட்டது.
அதே ஆண்டு இந்திய அரசு மிக அதிக மதிப்புடைய 10,000 ரூபாய் நோட்டை அச்சிட்டு வெளியிட்டது. பின் அந்த நோட்டு 1946 மற்றும் 1978ம் ஆண்டு செல்லாது என அறிவிக்கப்பட்டது. தற்போது 2016ல் ரூ.500 மற்றும் 1000 செல்லாது என்று இந்திய அரசு அறிவித்துள்ளது. நாம் பார்க்கும் ஒவ்வொரு சிறுசிறு புள்ளிகளுக்கும் கூட கட்டாயம் அர்த்தங்கள் உண்டு. ஒரு நாட்டினுடைய நாணயங்களை அவ்வளவு எளிதாக, ஏனோதானோவென்று அச்சடித்துவிட முடியாது. நாணயங்களில் நாம் வைக்கும் ஒவ்வொரு புள்ளிக்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது. அதிலும் குறிப்பாக, நம்முடைய இந்திய நாணயங்களில் உள்ள புள்ளி மற்றும் நட்சத்திரக் குறிகளுக்கென தனி அர்த்தங்கள் உண்டு.
நம்முடைய இந்திய ரூபாய் நோட்டுகள் நாசிக், தேவாஸ், மைசூர் ஆகிய இடங்களிலும், நாணயங்கள் மும்பை, நொய்டா, கொல்கத்தா ஆகிய இடங்களிலும் அச்சடிக்கப்படுகின்றன. இந்த நாணயங்களின் இரண்டு பக்கங்களில் ஏதேனும் ஒரு பக்கத்தில் எந்த ஆண்டு அச்சடிக்கப்பட்ட நாணயம் என்ற குறிப்பு இருக்கும். அதற்கு கீழே சில நாணயங்களில் புள்ளியும், சில நாணயங்களில் நட்சத்திரக் குறியும் சிலவற்றில் டைமண்ட் குறியீடும் இருக்கும். சில நாணயங்களில் எந்த குறியீடுகளும் இருப்பதில்லை. இந்த குறியீடுகளுக்கு என்னதான் அர்த்தம்.

அதன் அர்த்தம், அந்த குறியீடுகள் குறிப்பிட்ட நாணயம் எங்கு அச்சடிக்கப்பட்டது என்பதைக் குறிப்பதாகும். நாணயங்களைப் பொருத்தவரையில், புள்ளிகளைக் குறியீடாகக் கொண்டவை டெல்லியிலும், டைமண்ட் குறியீடு உள்ள நாணயங்கள் மும்பையிலும், நட்சத்திரங்களைக் குறியீடாகக் கொண்டவை ஹைதராபாத்திலும் அச்சிடப்பட்டவை. கொல்கத்தாவில் அச்சிடப்படும் நாணயங்களில் எந்த குறியீடும் இடுவதில்லை.