JSM சார்பில் எம்பரர் என்டர்டெயின்மென்ட் அக்பர் சாதிக், இர்பான் மாலிக் தயாரித்து சபரிஷ் நந்தா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “இந்திரா”
இத் திரைப்படத்தில் வசந்த் ரவி,சுனில், மெஹ்ரீன் பிர்சாடா, அனிகா சுரேந்திரன், கல்யாண் குமார், ராஜ்குமார் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் நாயகன் வசந்த் ரவி, காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். அதிக மதுப்பழக்கத்தால் அவர் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுகிறார்.

இதன் பிறகு அவரது மதுப்பழக்கம் இன்னும் அதிகமாகிறது. இவரது குடிப்பழக்கத்தால் அவரது மனைவி மெஹ்ரீன் பிர்சாடாவுக்கும் வசந்த் ரவிக்கும் சரிவர பாசப்பணிப்பு இல்லாமல் போகிறது. இந்நிலையில் வசந்த் ரவியின் பார்வை திடீரென்று பறிபோகிறது.
இந்த விஷயம் மனைவிக்கு தெரிய வர அவருக்கு தைரியம் சொல்லி மீண்டும் இருவரும் பாசப் பிணப்புடன் வாழ்ந்து வருகின்றனர். இன்னொரு பக்கம் சென்னையில் அடுத்தடுத்து தொடர் மர்ம கொலைகள் நடக்கிறது.

கொலையாளியை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இருக்கும் காவல் துறைக்கு சரியான துப்பு கிடைக்காமல் இருக்கும் நேரத்தில் திடீரென்று அதே பாணியில் வசந்த் ரவியின் மனைவி மெஹ்ரீன் பிர்சாடாவும்,கொலை செய்யப்படுகிறார்.
இந்த வழக்கை விசாரிக்கும் காவல்துறை, வெளியாட்கள் யாரும் உள்ளே வந்தார்களா என்று சிசிடிவி மூலம் பரிசோதனை செய்யும் பொழுது வெளியாட்கள் யாரும் உள்ளே வரவில்லை என்பது உறுதியானது.

உள்பக்கமாக தாள்ப்பால் போட்டு வீட்டுக்குள் நடந்த இந்தக் கொலையை மெஹ்ரீன் பிர்சாடா கணவர் வசந்த ரவி கொலை செய்திருப்பார் என்று காவல்துறை சந்தேகப்படுகிறது.
ஆனால்,வசந்த் ரவி தனது மனைவியை கொலை செய்த கொலையாளியை கண்டு பிடிக்க, தனது போலீஸ் நண்பரின் உதவியோடு கொலையாளியை பிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.
பார்வையில்லாத வசந்த் ரவி கொலையாளியை கண்டுபிடித்தாரா? எதற்காக அடுத்தடுத்து ஒரே பாணியில் இந்த மர்ம கொலை அரங்கேறுகிறது? இந்த கொலைகளின் பின்னணியில் இருப்பவர் யார்? என்பது தான் படத்தின் மீதி கதை.
வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வசந்த் ரவி, தனது கதா பாத்திரத்திற்கேற்றவாறு சிறப்பாக நடித்துள்ளார்.
கண் பார்வை இழந்து கண்ணுக்கு கண்ணாக இருந்த தனது மனைவியை இழந்து அவர் படும் அந்த பரிதவிப்பின் நடிப்பு பார்ப்போரை கண் கலங்க வைக்கும்.
மதுப்பழக்கத்தில் அடிமையாக இருக்கும் ஒரு கணவனின் மனைவி அனுபவிக்கும் போது வரும் கோபமும், கணவரின் கண்கள் இழந்த போது அவர் படும் வேதனையை பார்த்து மனைவி கலங்கும் நடிப்பில் ஸ்கோர் செய்துள்ளார் நாயகி மெஹ்ரீன் பிர்சாடா
வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுனில், கொடூரமாக கொலைகளை செய்து விட்டு அதில் மகிழ்ச்சி காணும் நடிப்பும் கொலை முகத்துடன் அவர் சிரிக்கும் சிரிப்பும் பார்வையாளர்களை திக் திக் என அடிக்க வைக்கிறது.
குறைவான காட்சிகளில் வந்தாலும் தனது சிரிப்பாலும் தனது அழகாலும் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளார், அனிக்கா சுரேந்தர்.

மற்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாகேந்திரா, நடன இயக்குநர் கல்யாண் இருவரும் கதையில் ஒரு முக்கிய பங்கு வகித்துள்ளனர்.
கிரைம் திரில்லர் திரைப்படத்தில் இருக்கும் திக் திக் பதட்டத்தை மேலும் அதிகரித்துள்ளது, பிரபு ராகவ் ஒளிப்பதிவு.
பாடல்கள், மற்றும் பின்னணி இசை படத்தின் காட்சிகளுக்கேற்றவாறு பயணித்துள்ளது, இசையமைப்பாளர் அஜ்மல் தஷீன் .
தொடரும் மர்ம கொலைகள், பூட்டி இருந்த வீட்டிற்குள் அரங்கேறும் கொலைகள், என அடுத்தடுத்த காட்சிகள் என்ன என்று பார்வையாளர்கள் கணிக்க முடியாத அளவிற்கு ஒரு க்ரைம் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார், இயக்குனர் சபரீஷ் நந்தா.
மொத்தத்தில், “இந்திரா “கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படம்.








