• Wed. Jun 18th, 2025
[smartslider3 slider="7"]

இந்தியாவின் பிரபலமான மினிஸோ கோவையில் தனது மூன்றாவது கிளையை லஷ்மி மில் வளாகத்தில் துவக்கியது.

BySeenu

Feb 27, 2024

அழகு கலை சாதனங்கள், வீட்டு உபயோக பொருட்கள், பெர்ஃப்யூம்ஸ், பரிசு பொருட்கள் என அனைத்து விதமான பொருட்களையும் விற்பனை செய்யும் மினிஸோ இந்தியா உட்பட 80 நாடுகள் என முழுவதும் 4200 கிளைகளை கொண்டு இயங்கி வருகிறது. இந்நிலையில் கோவையில் தனது மூன்றாவது கிளையாக மினிஸோ லூலூ மால் அமைந்துள்ள லஷ்மி மில் வளாகத்தில் துவங்கியுள்ளது. இதன் நிர்வாக இயக்குனர்கள் ஷ்ரேயன்ஸ்,அக்‌ஷய்,பரத் ஆகியோர் தலைமையில் துவக்க விழா நடைபெற்றது. தங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு பிடித்தமான பரிசு பொருட்களை வாங்க சிறந்த தேர்வாக மினிஸோ ஸ்டோர் இருப்பதாகவும்,இங்கு ஒரே இடத்தில், அழகு கலை சாதனங்கள், வீட்டு உபயோக பொருட்கள், பெர்ஃப்யூம்ஸ், பரிசு பொருட்கள், பொம்மைகள், தினசரி தேவையான அத்தியாவசிய பொருட்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட வகையான பொருட்கள் 60 ரூபாயில் இருந்து,1800 ரூபாய் வரை இங்கு கிடைப்பதாக கோவை கிளைகளின் தலைமை மேலாளர் ஆரோன் கீட்ஸ் தெரிவித்தார்.